இருமல் மருந்துக்கு தடை விதிக்க முடியாது - அமைச்சர் சுப்பிரமணியன் பரபரப்பு பேட்டி.!!
minister subramaniyan say no ban cough syrub
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் காஞ்சீபுரத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து சாப்பிட்டு குழந்தைகள் இறப்பு மற்றும் உடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதற்கு காரணமாக இருந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், ‘எங்களால் தடைவிதிக்க முடியாது. ஆனால் அந்த மருந்தை வாங்கக்கூடாது என்று தமிழகத்தில் தடை விதித்திருக்கிறோம் என்றது தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பேசிய அவர், ‘தமிழ்நாடு முழுவதும் மலை மற்றும் கிராம பகுதிகளில் அமைந்துள்ள மருத்துவமனைகளில் பாம்பு கடி, நாய் கடிக்கான மருந்துகள் எப்பொழுதும் இருப்பு இருக்கின்ற வகையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மருந்துகள் இருப்பு இருக்கிறதா? என்று தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்.
தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் இல்லை. சாதாரண காய்ச்சல்தான் உள்ளது. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழைக்காலத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நடைபெற உள்ளது” என்றுத் தெரிவித்தார்.
English Summary
minister subramaniyan say no ban cough syrub