லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைப்பு - காரணம் என்ன?
love insurance kompany movie release date postpond
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ட்யூட். இந்தத் திரைப்படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.
இந்தத் திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக உள்ளது. அதே நாளில் பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படமும் வெளியாக இருக்கிறது.
பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் ட்யூட் படம் அதே நாளில் வெளியாவதால் Lik படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஒத்திவைத்து அறிவித்துள்ளது. அதாவது இந்தப் படம் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் திரைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
love insurance kompany movie release date postpond