அஜித்குமார் கொலை வழக்கு: காவல் அதிகாரிகள் மீதான சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்! அக்டோபர் 17 முதல் விசாரணை தொடக்கம்! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார் மரண வழக்கு தற்போது திருப்புமுனையை எட்டியுள்ளது. இதில் கவர்லர்கள் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித்குமார் சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து கொலை வழக்காக பதிவு செய்து, சம்பந்தப்பட்ட தனிப்படை காவல் அதிகாரிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பிறகு வழக்கின் நம்பகத்தன்மை குறித்து எழுந்த கேள்விகளின் பேரில், இந்த வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.க்கு (CBI) மாற்றி விசாரணை நடத்த மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் கட்டளையிட்டது.

அதன்படி, சி.பி.ஐ. தீவிரமாக விசாரணை மேற்கொண்டு, காவல் வாகன ஓட்டுநர் ராமச்சந்திரனையும் குற்றப்பத்திரிகையில் சேர்த்தது. பல கோணங்களில் நடந்த இந்த விசாரணையின் பின், சி.பி.ஐ. மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.கடந்த 19-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகை தந்தபோது, கைதான காவல்காரர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. 

இதையடுத்து, வழக்கை மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றி அனுப்புமாறு தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.தற்போது, வழக்கு மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி சிவகடாட்சம் முன் விசாரணைக்கு வந்துள்ளது.

நீதிபதி உத்தரவிட்டதாவது,"அஜித்குமார் கொலை வழக்கின் மேலான விசாரணை மதுரை 5-வது கூடுதல் நீதிமன்றத்தில் தொடர வேண்டும். வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் அந்த நீதிமன்றத்திற்கு மாற்றப்பட வேண்டும். வருகிற அக்டோபர் 17 முதல் வழக்கு விசாரணை தொடங்கும்.”இந்த உத்தரவுடன், அஜித்குமார் மரண மர்மம் வெளிச்சம் காணும் நாள் நெருங்கிவிட்டது என தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ajith Kumar murder case CBI files chargesheet against police officers Trial to begin from October 17


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->