நடிகர் ரஜினிகாந்த் பத்ரிநாத் கோவிலில் சாமி தரிசனம்..புகைப்படங்கள் வைரல்!
Actor Rajinikanth had a darshan of the deity at Badrinath Temple photos go viral
நடிகர் ரஜினிகாந்த் பத்ரிநாத் கோவிலில் சாமி தரிசனம் செய்தது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடத்துனராக தன் வாழ்க்கையை தொடங்கியவர். ஆனால் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் ஒரு பிரபலமாக புகழின் உச்சத்திற்கு சென்று விட்டார். “வயசானாலும், உன் அழகும் ஸ்டைலும் இன்னும் உன்ன விட்டுபோகல” என்ற வசனத்திற்கு ஏற்ப தற்பொழுதும் நடிப்பில் கலக்கி கொண்டு வருகிறார்.
இவரது பயணம் சாதாரண பயணமாக இல்லை, அவர் இமயமலை செல்வது போல் அவரது சினிமா பயணமும் மிகவும் கடினமானது தான். எவ்வளவு கஷ்டம், பிரச்சனை, தோல்வி, சர்ச்சை என பல விஷயங்களை தாண்டி தான் இப்போதும் நம்பர் ஒன் நடிகராக வலம் வருகிறார்.
சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்த படம் வெளியாகும் முன்பு இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், தற்போது ரஜினிகாந்த் ஒரு வார கால ஆன்மீகப் பயணமாக இமயமலை சென்றுள்ளார். அதனை தொடர்ந்து பத்ரிநாத்திலிருந்து பாபா குகைக்கு செல்லும் ரஜினிகாந்த் ஒரு வாரம் அங்கு தங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்துள்ளார். முன்னதாக, பத்ரிநாத் கோவிலுக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த்துக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பத்ரிநாத் சன்னதியில் பிரசாதம் வழங்கப்பட்டது.
நடிகர் ரஜினிகாந்த் பத்ரிநாத் கோவிலில் சாமி தரிசனம் செய்தது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Actor Rajinikanth had a darshan of the deity at Badrinath Temple photos go viral