கரூர் சர்ச்சைக்கு பின் விஜயின் ஆட்டம்! தொண்டர் படை, புதிய தலைமை, அதிரடி அறிவிப்புகள் காத்திருக்கின்றன!
Vijay performance after Karur controversy Volunteer force new leadership action announcements await
கரூர் சம்பவத்துக்குப் பிறகு, தளபதி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில் பெரும் மாற்றங்கள் காத்திருக்கின்றன. கட்சியின் ஒழுங்கையும், பொதுக்கூட்டங்களின் கட்டுப்பாட்டையும் வலுப்படுத்தும் நோக்கில், விஜய் தற்போது தொண்டர் படை அமைக்கும் திட்டத்தை தீவிரமாக வகுத்து வருகிறார்.
இதில் திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக போன்ற முக்கிய அரசியல் கட்சிகள் ஏற்கனவே தொண்டர் படைகளை அமைத்து, கூட்டங்களில் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கை உறுதிப்படுத்தி வருகின்றன.

அந்த வரிசையில், தவெகவும் தனது தொண்டர் படையை உருவாக்கி, அதில் இணையும் உறுப்பினர்களுக்கு அமைப்புசார் மற்றும் பாதுகாப்பு பயிற்சிகளை வழங்க திட்டமிட்டுள்ளது.இதே நேரத்தில், கரூர் வழக்கு சர்ச்சைக்குப் பிறகு, கட்சியின் சில முக்கிய நிர்வாகிகள், பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் தற்காலிகமாக கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளனர்.
இதனால், 2ம் கட்ட தலைமை அமைப்பை உருவாக்குவது அவசியமான நிலைமை என விஜய்க்கு தெரிந்துள்ளது.இதற்காக, முன்பு வேறு கட்சிகளில் அரசியல் அனுபவம் பெற்றவர்களை தவெகவில் இணைத்து, 2ம் நிலை தலைவர்களாக நியமிக்க விஜய் திட்டமிட்டுள்ளார். இவர்களின் பெயர் பட்டியலை தற்போது விஜய் நேரடியாக தயாரித்து வருகிறார்.
இந்த பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய இரண்டாம் கட்ட தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தவெக தொண்டர்களுக்கு அடிப்படை கட்டமைப்பு, தேர்தல் மேலாண்மை, அரசியல் நிலைப்பாடு மற்றும் தன்னடக்கம் போன்ற முக்கிய துறைகளில் பயிற்சி அளிக்க உள்ளனர்.இதற்குப் பின், தொண்டர் படை குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பும், அதற்கான பயிற்சி முகாம்கள் எங்கே, எப்போது நடைபெறும் என்பதையும் தவெக அறிவிக்கவுள்ளது.
English Summary
Vijay performance after Karur controversy Volunteer force new leadership action announcements await