வெளியானது எஸ்டிஆர் 49' படத்தின் தலைப்பு..!!
str 49 movie tittle release
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சிலம்பரசன் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்கியது. சிம்பு இப்படத்தில் 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், வெற்றி மாறன் பிறந்தநாளை முன்னிட்டு சிலம்பரசன் நடிக்கும் 'எஸ்டிஆர் 49' படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.
இந்த நிலையில், 'எஸ்டிஆர் 49' படத்தின் தலைப்பு 'அரசன்' என்று கலைப்புலி எஸ்.தாணு தனது எக்ஸ் தள பக்கத்தில் போஸ்டருடன் வெளியிட்டுள்ளார். போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
English Summary
str 49 movie tittle release