கரூர் சம்பவத்தால் வெலவெலத்து நிற்கும் தவெக கூடாரம்! துல்லியமாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. ஸ்டன் ஆகி நிற்கும் விஜய்? - Seithipunal
Seithipunal


கரூரில் நடந்த பேரழிவுக்குப் பின் தமிழக வெற்றிக் கழகமும் அதன் தலைவர் விஜயும் மீது நீதிமன்றம் கடுமையான விமர்சனங்களும் கண்டனங்களும் தெரிவித்துள்ளது. ஆனால் அதற்கு பிறகும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அக்கட்சிக்கு எதிராக நேரடி நடவடிக்கை எடுக்கவில்லை என்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக உள்ளது.

கரூர் நிகழ்ச்சியில் ஏற்பட்ட 41 உயிரிழப்புகள் குறித்து நீதிமன்றம்,“இது இயற்கை பேரழிவு அல்ல, மனிதனால் உருவாக்கப்பட்ட விபத்து. சட்டத்தின் முன் அனைவரும் சமம். அரசு அமைதியாக இருக்கக் கூடாது. தேவையான நடவடிக்கை எடுங்கள். ஏன் கருணை காட்டுகிறீர்கள்?”என்று கடுமையாக எச்சரித்தது.

மேலும், விஜய் ரசிகர் ஆதவ் அர்ஜுனா சமூக ஊடகத்தில் போட்ட சர்ச்சைக்குரிய பதிவை குறித்து,“அந்த பதிவின் பின்னணி என்ன? எதன் அடிப்படையில் போட்டார்? அவர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து சட்டப்படி விசாரணை நடத்த வேண்டும்”என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதேபோல், விஜய் பயணித்த பேருந்து விபத்து குறித்தும்,“இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. கோர்ட் கண் மூடி இருக்காது. தேவையான நேரங்களில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்”என்றும் கோர்ட் எச்சரிக்கை விடுத்தது.

ஆனால், இதுவரை முதல்வர் ஸ்டாலின் எந்தவித பெரிய நடவடிக்கைக்கும் உத்தரவிடாமல் இருப்பது, வெற்றிக் கழகத்தை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

அரசியல் வட்டாரங்கள் கூறுவதாவது:“ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால் விஜயை திருச்சியிலேயே கைது செய்திருப்பார். ஆனால் ஸ்டாலின் அமைதியாக இருக்கிறார். விஜயை கைது செய்தால் கரூர் பிரச்சனை அரசியல் பிரச்சனையாக மாறி விஜய்க்கே மைலேஜ் கிடைக்கும். அதனால் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டுமே பார்க்கலாம் என்ற நிலைப்பாட்டில் உள்ளார்.”

விஜயும் சமீபத்தில்,“என்னை முடிந்தால் தொட்டுப் பாருங்கள்”என்று சவால்விட, சிலர் அதை அரசியல் மைலேஜ் பெறும் முயற்சியாகவே பார்த்தனர்.ஆனால் ஸ்டாலின் அதற்கு பதில் கூறாமல்,“கோர்ட் சொல்வதைப் பின்பற்றுவோம்”என்று கண்காணித்து வரும் வகையில் காய்நகர்த்தி வருகிறார்.

இதனால், விஜய் தரப்பிற்கு எதிர்பார்த்த அரசியல் ஆதரவு கிடைக்காமல், சற்றே அதிர்ச்சி அடைந்துள்ளனர் என அக்கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நீதிமன்றம் கடுமையாக எச்சரித்தும், ஸ்டாலின் அரசியல் சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு பொறுமையாக இருந்து வருகிறார். இதனால், கரூர் பேரழிவு விவகாரத்தில் எதிர்பாராத அரசியல் லாபம் விஜய்க்கு ஏற்படாமல் தடுக்கப்பட்டிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Thaveka tent is in a state of shock due to the Karur incident Stalin moves the ball precisely Vijay is stunned


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->