விஜய் மனம் நொந்திருக்கிறார்... அது வாழ்நாள் முழுதும் இருக்கும்!-கரூர் சம்பவம் குறித்து நடிகர் ரஞ்சித் உருக்கம்
Vijay heartbroken It lifetime Actor Ranjith Urukkam Karur incident
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ள சந்தோஷ மண்டபத்தில், விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் ஆன்மிக ஒளியால் ஒளிர்ந்த வேல் பூஜை சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு வடக்கு தமிழக தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.
மேலும்,சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட 'நடிகர் ரஞ்சித்', வேல்பூஜையை தொடங்கி வைத்து பக்தியுடன் வழிபாடு செய்தார்.பிறகு ஊடகங்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது,"நாடு முழுவதும் நலமும் அமைதியும் நிலைக்க, வரும் அக்டோபர் 25, 26, 27-ம் தேதிகளில் நடைபெறும் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு ஆயிரம் கோவில்களில் கந்த சஷ்டி பாராயணம் ஒலிக்கப் போகிறது.

அதோடு, வேல் பூஜை, கோ பூஜை போன்ற ஆன்மிக நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. அதற்கான முன்னோட்டமாக, இன்று ஏராளமான பக்தர்களுடன் சேர்ந்து வேல் பூஜை செய்து ஆனந்தமடைந்தேன்" என்று தெரிவித்தார்.மேலும், கரூர் சம்பவத்தை நினைத்து மனம் கலங்கிய அவர் மேலும் தெரிவித்ததாவது,"அந்த நிகழ்வால் விஜய் மிகுந்த வேதனையில் இருப்பார் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
எந்த தலைவரும், தங்கள் கூட்டத்தில் உயிரிழப்பு நடந்தபின் அமைதியாக இருக்க முடியாது. அந்த 41 உயிர்களின் இழப்பு, விஜய்யின் மனதில் வாழ்நாள் முழுவதும் ஒரு வடுவாகவே இருக்கும்" என்றார்.அதுமட்டுமின்றி,அரசியலைப் பற்றி கருத்து தெரிவித்த அவர்,"அரசியலில் நிரந்தர நண்பர் இல்லை, எதிரி இல்லை.
ஜனவரி பிறகு என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. அரசியல் என்பது காவல்துறை சைரன் ஒலித்தவுடன் யு-டர்ன் போடும் வண்டி மாதிரி தான்!” என்று நையாண்டி கலந்த பாணியில் தெரிவித்தார்.இறுதியாக அவர் ,"கடவுள் முன் அனைவரும் சமம். நாம் எல்லோரும் தூசணுக்கள் தான். வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வதே உண்மையான சமத்துவம், அதுதான் சூப்பர் ஆன ஆன்மிகம்!” என்று பக்தி உணர்வுடன் தெரிவித்தார்.
English Summary
Vijay heartbroken It lifetime Actor Ranjith Urukkam Karur incident