மீண்டும் கிளப்பிய சர்ச்சை! இந்தியா -பாகிஸ்தான் சண்டைக்கு Full Stop வைத்தது என் வரி! -டிரம்ப் - Seithipunal
Seithipunal


கடந்த சில காலமாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின், “நான் உலகளவில் 7 போர்களை நிறுத்தினேன்” என்ற பேச்சுகள் மீண்டும் மீண்டும் வருகிறது.அதில் இந்தியா-பாகிஸ்தான் மோதலையும் உள்ளடங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.மேலும்,  இந்திய அரசு இதை நிராகரித்து இருந்தாலும், டிரம்ப் தொடர்ந்து அதே வாதத்தை முன் வைத்து வருகிறார்.

மேலும் டிரம்ப் இது குறித்து தெரிவித்ததாவது,"நமக்கு வரிகள் (tariffs) மிக முக்கியம். வரிகளின் வாயிலே நாங்கள் அமைதியை உருவாக்கி வந்தோம். வரிகள் காரணமே நமக்கு பல பில்லியன் டாலர் வருவாயும், அமைதிபுரியும் சக்தியும் கிடைக்கிறது. இந்தியா–பாகிஸ்தான் மோதலை எடுத்துக்கொள்ளுங்கள்.

அவர்கள் முழு வீச்சில் போராட தயாராக இருந்தார்கள்; ஏனெனில் போர் மோசமாக விரிந்திருந்தது. நான் அப்போது என்ன உரைத்தேன் என்பதைக் சொல்லமாட்டேன், ஆனால் அது பயனுள்ளதாக இருந்ததால் உடனே சண்டை நிறுத்தப்பட்டது.

இது எல்லாம் வரி விதிப்பை அடிப்படையாகக் கொண்ட செயல்முறையால் நடந்தது.”இந்தக் கூற்று அரசியல் உலகில் புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.மேலும், வரி கொள்கைகள் கருதப்படும் தாக்கமும், அவற்றின் அரசியல் விளைவுகளும் மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Controversy reignites again im the one who stop ind pak war using tariff


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->