ரஜினி-கமல் காம்போவில் புதிய திருப்பம்! இளம் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு கிடைத்த கனவு வாய்ப்பா..?
new twist Rajini Kamal combo dream opportunity for young director Pradeep Ranganathan
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூலில் வெற்றிக் கொடி நாட்டி வருகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு உற்சாகத்தைத் தந்த ஒரு பெரும் செய்தி வெளியாகியுள்ளது.
ரஜினி மற்றும் கமல் இணையும் ‘சூப்பர் காம்போ’.இதில் சில வாரங்களுக்கு முன், இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தது. இதை உலகநாயகன் கமல்ஹாசன் தானே ஒரு நிகழ்ச்சியில் உறுதிப்படுத்தி ரசிகர்களை களைகட்ட வைத்தார். மேலும், ‘கூலி’க்குப் பிறகு இந்த பெரும் கூட்டணிக்கும் இயக்குநராக லோகேஷ் கனகராஜ் தான் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அண்மையில் அப்டேட் அதிர்ச்சியையும் ஆர்வத்தையும் சேர்த்து தந்துள்ளது. இதில் ரஜினிகாந்த், “அடுத்த படம் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கப் போகிறது. கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை இருக்கிறது; பிளான் ரெடியா இருக்கு. ஆனா கதை, கதாபாத்திரம் இன்னும் பக்கா ஆகல. ஆனதும் நிச்சயம் நடிப்பேன்!” என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், அந்த பிக்பட்ஜெட் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவில்லை என்பது உறுதியானது. இதனால் ரசிகர்களிடையே ஒரு புதிய கேள்வி, “அப்போ ரஜினி-கமல் காம்போ படத்தை யார் இயக்கப் போகிறார்?” என்பதாக எழுந்துள்ளது.அந்த கேள்விக்கான புதிய பதில் இணையத்தில் தீ போல பரவி வருகிறது.
மேலும்,‘கோமாளி’, ‘லவ் டுடே’ போன்ற வெற்றிப்படங்களை இயக்கி ரசிகர்களிடையே தனி ரசிகர் மன்றம் பெற்ற இளம் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தான் இந்த ரஜினி-கமல் மாஸ் கூட்டணியின் படத்தை இயக்கப் போகிறார் என தகவல் பரவி வருகிறது.இந்த இணைப்பு உறுதியாகும் நாளே தமிழ் திரை உலகிற்கு ஒரு புதிய வரலாறு எழுதும் நாளாக மாறும் என்று ரசிகர்கள் உற்சாகம் அடைகின்றனர்.
இந்நிலையில், இணையத்தில் பரவி வந்த தகவலுக்கு தெளிவாக புள்ளி வைத்துள்ளார் இளம் சென்சேஷன் பிரதீப் ரங்கநாதன். சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், “ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படத்தை நான் இயக்கவில்லை. தற்போது நான் முழுமையாக நடிப்பில் தான் கவனம் செலுத்தி வருகிறேன்.
ஆனால் ரஜினி-கமல் படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்கு வந்ததா என்ற கேள்விக்கு இப்போது எந்த பதிலும் சொல்ல முடியாது,” என்று சிரித்தபடி தெரிவித்துள்ளார்.அவரது இந்த பதில் ரசிகர்களிடம் ஒரு புதிய ஆர்வத்தை தூண்டியுள்ளது.ஏனெனில் அவர் நேரடியாக மறுக்காமல், “இப்போது சொல்ல முடியாது” என்று விட்டு சென்றதால், உண்மையில் அவர் அந்த பட்டியலில் உள்ளாரா என்ற கேள்வி மீண்டும் தலைதூக்கி வருகிறது.
இதன் மூலம், ரஜினி-கமல் இணையும் பிக்பட்ஜெட் படத்திற்கான இயக்குநர் தேடலில் பிரதீப் ரங்கநாதனும் போட்டியாளர்களில் ஒருவராக இருப்பது உறுதியாகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மேலும் பல மடங்கு உயர்ந்துள்ளது.
English Summary
new twist Rajini Kamal combo dream opportunity for young director Pradeep Ranganathan