'நீதிபதி சுவாமிநாதன் ஒழிக' என்று கோஷம் எழுப்பிய தி.மு.க., - எம்.எல்.ஏ., மகன்; மாயை மூடி அழைத்து சென்ற போலீசார்..!
Police sent DMK MLAs son away after raising slogans against judges verdict
மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தமிழக முதல்வர் ஸ்டாலின், நேற்று மதியம், சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது அவரை வரவேற்று தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர். அதில் ஒருவர், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், நீதிபதியின் தீர்ப்பிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்.
அவரை போலீசார் அழைத்து சென்ற போது அவரிடம் நிருபர்கள், 'என்ன கோஷம் எழுப்பினீர்கள்?' என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மத கலவரத்தை துாண்டுகின்றனர்' என்று தெரிவித்தார். அப்போது, அவரின் வாயை மூடி, போலீஸ் அதிகாரியின் வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில், அவர், துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தி.மு.க., - எம்.எல்.ஏ., மார்க்கண்டேயனின் மகன் அக்ஷய், 22, என்பதும், டில்லி சட்ட கல்லுாரியில் படித்து வருவதும் தெரிய வந்துள்ளது. அவரை, போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்பின்னர், அக்ஷய், தன் தந்தையான விளாத்திகுளம் தி.மு.க., - எம்.எல்.ஏ., மார்க்கண்டேயனுடன் எட்டையபுரத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:
நீதிபதி சுவாமிநாதன் பாசிச கருத்துகளையும், சொந்த கருத்துகளையும் தீர்ப்பில் இணைத்து எழுதியதை போல எனக்கு தென்பட்டது. அவர் ஒரு நிகழ்ச்சியிலும், தீர்ப்பு மூலமாக தான் தீபத்தை ஏற்ற முடியவில்லை; அரங்கத்தில் தீபம் ஏற்றுகிறேன் என, பேசியிருந்தார்.
தொடர்ந்து, முதல்வர் புரட்சிகரமான ஒரு அறிக்கையை கொடுத்தார். சட்டரீதியாக நாம் பார்த்து கொள்ளலாம் என, முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். அந்த தைரியத்தில் தான் விமான நிலையத்தில், 'நீதிபதி சுவாமிநாதன் ஒழிக' என, கோஷம் எழுப்பினேன்.'' என்று கூறியுள்ளார்.
English Summary
Police sent DMK MLAs son away after raising slogans against judges verdict