ஆல்பம் வீடியோ மூலம் சினிமாவில் ஹீரோவாக கால் பதிக்கும் ரிஷி பிரபுதேவா..!
Rishi Prabhu Deva steps into cinema as a lead actor through an album song
தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என இந்திய சினிமாவில் நடன வடிவமைப்பாளராக, நடிகராக, இயக்குநராக மிக பிரபலமாக வளம் வருபவர் பிரபுதேவா. தற்போதும் ஹீரோ ரோலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா இப்போது தன்னுடைய கலைப் பயணத்தைத், சினிமா வாழ்க்கையை தொடங்கியுள்ளார். 'முதல் முதலாய் ' என்ற இன்டி மியூசிக்கல் வீடியோ ஆல்பம் மூலம் தான் நடனமாடி நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார்.
இந்தப் பாடலை ட்ரஸ்டினா ஐசக் என்பவர் இயக்கியுள்ளார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் ரவிச்சந்திரன் ஸ்ரீநிவாஸ் இப்பாடலை எழுதி இசையமைக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் பாடியுள்ளார். பாடலில் வரும் ராப் வரிகளை இசைக் கலைஞர் ஆதித்யா பாடியிருக்கிறார். ரிஷி தேவா உடன் இணைந்து நடிகை கைரா இப்பாடலில் நடனமாடியுள்ளார்.
இந்த பாடலுக்கு சுரேன் நடனம் அமைத்துள்ளார். நடிகர் பிரபுதேவா நடனமாடி பிரபலமான 'சிக்கு புக்கு ரயிலே, பாடலை சிறுவயதில் ஜி.வி.பிரகாஷ் குமார் பாடினார்.
இப்போது பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும், 'முதல் முதலாய் ' மியூசிக்கல் வீடியோ ஆல்ப பாடலையும் ஜி.வி.பிரகாஷ் குமார்தான் பாடியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்பாடல் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
English Summary
Rishi Prabhu Deva steps into cinema as a lead actor through an album song