அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியின் தொகுதிப் பங்கீடு; அமமுகவுக்கு 12 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது..? - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அணைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணிப் பேச்சு வார்த்தை, தொகுதிப்பங்கீடு என மும்முரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தேர்தல், திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம், சசிகலாவின் கட்சி என 05 முனைப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 20-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணியை அமைத்துள்ள திமுக தனது கூட்டணியில் தொகுதிப்பங்கீட்டை ஓரளவுக்கு இறுதி செய்துள்ளது. 

திமுக, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு தொடங்குவதற்கு முன் தனது கூட்டணியை அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டது.  ஆனாலும், தொகுதிப்பங்கீடு விவகாரத்தில் பொறுமைக்காத்து வந்தது. இதற்கு, தவெக-வை தங்கள் கூட்டணிக்கு இழுக்க முயற்சி செய்து வந்ததே காரணம் எனக் கூறப்பட்டது. தற்போது தவெக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதனையடுத்து, அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி கூட்டணிப் பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் டெல்லியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து தொகுதிப்பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்கீடு செய்வது ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

அதன் பின்னர், சென்னை திரும்பும் போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கே. பழனிசாமி இன்னும் 04 நாட்களில் அனைத்து விவரங்களும் வெளியிடப்படும். எங்களுக்கு வெற்றிவாய்ப்பு என்பது 234 தொகுதிகளிலும் இருக்கிறது, யாருக்கு எந்த தொகுதி என்பது குறித்து பேசி முடிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், அமித் ஷா-வின் அழைப்பின் பேரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் நேற்று டெல்லி சென்ற நிலையில், இன்று காலை 11.30 மணி அளவில் டிடிவி தினகரன், பியூஷ் கோயலுடன் அமித் ஷா-வைச் சந்தித்த்தார். அவரை தொடர்ந்து, அன்புமணி ராமதாஸும் அமித் ஷாவுடன் சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது. 

இதனை தொடர்ந்து, இன்று பியூஷ் கோயலுடன் இருவரும் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்துவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் தற்போது டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவுக்கு 12 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை பியூஷ் கோயல் தமிழகம் வரும் நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AMMK has been allotted 12 constituencies


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->