போதைப்பொருள் வழக்கில் கைது! திரைப்பட தயாரிப்பாளரிடம் போலீசார் தீவிர விசாரணை தொடக்கம்...!
Arrested drug case Police begin intensive investigation against film producer
2021ஆம் ஆண்டு சிம்பு நடித்த ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தின் இணை தயாரிப்பாளரான சர்புதீன், ஓஜி கஞ்சா தொடர்பான போதைப்பொருள் வழக்கில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருடன் சேர்த்து சீனிவாசன் மற்றும் சரத் எனும் இருவரையும் சென்னை போலீசார் அதே வழக்கில் தடுத்துள்ளார்.வார இறுதிகளில் சர்புதீன் வீட்டில் நடத்தப்பட்ட வந்த ‘பிரைவேட் பார்ட்டிகளில்’, கொக்கெய்ன், மெத்தாம் பெட்டமைன், ஓஜி கஞ்சா போன்ற உயர்நிலை போதைப்பொருள்கள் பயன்படுத்தப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர்.

மேலும், அவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரிலிருந்து ₹27 லட்சம் ரொக்கம், மூன்று ஆப்பிள் ஐபோன்கள் உள்ளிட்ட பல பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனுடன், சர்புதீனை திருமங்கலம் போலீசார் காவலில் எடுத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர் திரை உலகத்தைச் சேர்ந்த எத்தனை பேருக்கு போதைப்பொருள் விநியோகித்துள்ளார்? யாரெல்லாம் இந்தச் சர்ச்சையில் சம்பந்தப்பட்டுள்ளனர்? என்பதையும் போலீசார் பல கோணங்களில் ஆராய்ந்து வருகின்றனர்.
English Summary
Arrested drug case Police begin intensive investigation against film producer