5 பேருடன் அட்ஜஸ்ட் செய்தால் பிரபல நடிகருக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு!காஸ்டிங் கவுச்ச் அனுபவத்தை வெளிப்படுத்திய நடிகை மிர்ச்சி மாதவி!
If you adjust with 5 people you have a chance to play the wife of a famous actor Actress Mirchi Madhavi reveals her casting couch experience
தெலுங்கு சினிமாவின் குணச்சித்திர நடிகையான மிர்ச்சி மாதவி, தனது காஸ்டிங் கவுச்ச் அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பிரபாஸின் மிர்ச்சி திரைப்படம் மூலம் பாராட்டைப் பெற்ற இவர், திரைப்பட வாய்ப்பு வழங்குவதாக சொல்லி பலர் தன்னை தவறாக அணுகியதாக கூறினார்.
ஒரு தயாரிப்பு குழுவைச் சேர்ந்த நபர், பிரகாஷ் ராஜின் மனைவியாக நடிக்கும் ரோல் கிடைக்கும் என கூறி, “ஐந்து பேருடன் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும்” என்றதாக மாதவி தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த அவர், வாய்ப்பு வேண்டாம் என்று கூறி போனை துண்டித்ததாக கூறினார்.
அதேபோல், தனது ஆரம்ப காலத்தில் ஒரு புதிய இயக்குநர் வீட்டுக்கு வந்து, நடந்து காட்டவும், புடவை கட்டி வரவும், இடுப்பைக் காட்டவும் கேட்டதாகவும், கோபத்தில் அவரை வெளியேற்றிவிட்டதாகவும் மாதவி கூறினார்.
Casting Couch எல்லா துறைகளிலும் உள்ளது என மாதவி குறிப்பிட, பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து இந்த வெளிப்பாடு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
If you adjust with 5 people you have a chance to play the wife of a famous actor Actress Mirchi Madhavi reveals her casting couch experience