கூடங்குளம் அணுமின் திட்டம்: 3வது அணுஉலையின் எரிபொருள் இந்தியா வந்தது – கூடங்குளத்தை டார்க்கெட் செய்த புதின்!
Kudankulam Nuclear Power Project Fuel for the 3rd reactor has arrived in India Putin targeted Kudankulam
தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மீதமுள்ள நான்கு அணுஉலைகளை விரைவில் கட்டமைத்து வழங்குவோம் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு வந்தபோது தெரிவித்துள்ளார். இதனிடையே, கூடங்குளம் 3வது அணுஉலையை செயல்பாட்டுக்கு கொண்டு வர முக்கியமான கட்டமான அணு எரிபொருள் சப்ளை இன்று தொடங்கியுள்ளது.
ரஷ்யாவின் ரோசாட்டம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எரிபொருள், மொத்தம் 7 மிகப்பெரிய விமானங்களில் இந்தியாவுக்கு அனுப்பப்படுகிறது. அதில் முதல் தொகுப்பு இன்று வந்தடைந்துள்ளது. எரிபொருள் முழுமையாக இந்தியா வந்துவிட்டால் கூடங்குளம் 3 மற்றும் 4ம் அணுஉலைகளின் ஆயுட்காலத்துக்குத் தேவையான முழு எரிபொருளும் தயாராக கிடைக்கும்.
கூடங்குளம் அணுமின் திட்டம் 6 அணுஉலைகள் கொண்டதாக திட்டமிடப்பட்டது. அதில் முதல் இரண்டு அணுஉலைகள் 2013 மற்றும் 2016ஆம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. ஒவ்வொரு அணுஉலையும் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டது. தற்போது 1800 மெகாவாட்டுக்கான மின்சாரம் உற்பத்தி செய்து தமிழகத்திற்கும், பிற மாநிலங்களுக்கும் வழங்கப்படுகிறது.
மீதமுள்ள 3, 4, 5, 6வது அணுஉலைகளின் கட்டுமானப் பணிகளை ரஷ்யாவின் ரோசாட்டம் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளை வேகப்படுத்த ரஷ்யா தரப்பில் புதிய ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. 2024ல் கையெழுத்தான எரிபொருள் ஒப்பந்தத்தின் அடிப்படையில், ரஷ்யாவின் நோவோசிபிர்ஸ்க் கெமிக்கல் கான்சென்ட்ரேட்ஸ் பிளான்ட் தயாரித்த எரிபொருள் இந்தியா வந்துள்ளது.
புதின் இன்று கூறியதாவது:“கூடங்குளத்தில் மீதமுள்ள நான்கு அணுஉலைகளின் பணிகளை விரைவில் முடிக்க ரஷ்யா முழுமையாக உதவும்”
இந்த அறிவிப்பும், 3வது அணுஉலையின் எரிபொருள் வரத்துவங்கியிருப்பதும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை முழுத் திறனில் இயக்கும் திட்டம் விரைவில் நனவாகும் எனக் காட்டுகிறது.
English Summary
Kudankulam Nuclear Power Project Fuel for the 3rd reactor has arrived in India Putin targeted Kudankulam