தமிழ் சினிமாவின் தந்தை மறைவில் துயர அலை...! சூர்யா-சிவக்குமார் துக்கத்தில் வைத்த வணக்கம்...!
wave grief over passing father Tamil cinema Suriya Sivakumar pay their respects grief
சினிமா உலகின் செம்மலான திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் காலமான செய்தி தமிழதிரைப்படத் துறையை துயரத்தில் மூழ்கடித்துள்ளது.
இன்று அதிகாலை வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது உடல் சென்னை வடபழனியில் அமைந்துள்ள ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அங்கே துயரம் சூழ்ந்த சூழலில்,நடிகர் சிவக்குமார் மற்றும் அவரது மகன் சூர்யா, மரியாதை செலுத்தும் தருணத்தில் கண்ணீரை அடக்க முடியாமல் உணர்ச்சி வசப்பட்டனர்.
சரவணனின் பங்களிப்பை நினைவுகூர்ந்து,திரைப்பிரபலங்களும், அரசியல் தலைவர்களும்,தொடர்ச்சியாக அஞ்சலி செலுத்தி ஸ்டுடியோக்களை நோக்கி திரண்டு வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் ஒரு பெரும் தூணாக விளங்கிய அவரது மறைவு,திரையுலகில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
English Summary
wave grief over passing father Tamil cinema Suriya Sivakumar pay their respects grief