விஜய் வீட்டில் ராகுல் காந்தியின் ‛ரைட்ஹேண்ட்’.!காங்கிரஸ் பிரவீன் சக்ரவர்த்தியால் மாறும் அரசியல் களம்– தமிழக அரசியலில் புதிய கணக்குகள்! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நடிகர் விஜயின் தவெகக் கட்சியுடன் காங்கிரஸ் கட்சி அணுக்கமாகப் பேசுகிறது என்ற தகவலுக்கு வலு சேர்த்தபடி, காங்கிரஸ் நிர்வாகியும் ராகுல் காந்தியின் நெருங்கியவருமான பிரவீன் சக்ரவர்த்தி இன்று சென்னை பட்டினப்பாக்கத்தில் விஜயை நேரில் சந்தித்து பேசினார். இருவரும் இரண்டரை மணி நேரத்திற்கும் மேல் ஆலோசனையில் ஈடுபட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுக கூட்டணியில் தற்போது இருக்கும் காங்கிரஸ், வரும் தேர்தலில் தங்களுக்கு அதிக இடங்கள் கிடைக்காது என்ற காரணத்தால் மாற்று கூட்டணியை ஆராய்ந்து வருகிறது என கூறப்படும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. கூட்டணி அமைப்பு, தமிழக அரசியல் நிலை, திமுகவின் தற்போதைய அணுகுமுறை உள்ளிட்ட பல விஷயங்கள் இந்த சந்திப்பில் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த திடீர் சந்திப்பு, “காங்கிரஸ் திமுக கூட்டணியை விட்டு வெளியேறுமா?” என்ற கேள்வியை மீண்டும் எழச்செய்துள்ளது. அதே நேரத்தில், விஜயின் தவெக கட்சி சிறுபான்மை வாக்குகளை ஈர்க்கும் நோக்கில் காங்கிரஸை கூட்டணியில் சேர்க்க விரும்புவதாகவும் அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

பிரவீன் சக்ரவர்த்தி யார் என்பது பற்றியும் ஆர்வம் அதிகரித்துள்ளது. சென்னை பிறப்பிடமாக உள்ள அவர், பொருளாதார நிபுணர். மைக்ரோசாப்ட், ஐபிஎம் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியவர். ராகுல் காந்தியின் நேரடி அழைப்பில் 2017ல் காங்கிரஸில் இணைந்து, தற்போது கட்சியின் டேட்டா அனலிட்டிக்ஸ் பிரிவு மற்றும் புரொபஷனல் காங்கிரஸ் பிரிவின் தலைவராக உள்ளார். 2019, 2024 தேர்தல்களில் காங்கிரஸின் பொருளாதார கொள்கை வடிவமைப்பில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட விரும்பிய அவருக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்ததால் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் திமுக–காங்கிரஸ் உறவில் ஏற்பட்டுள்ள பிளவு அரசியல் வட்டாரங்களில் அறியப்பட்ட ஒன்றாகும்.

இந்த சூழ்நிலையில் விஜய்–பிரவீன் சந்திப்பு, 2026 தேர்தலுக்கு முன்பான கூட்டணி அமைப்பில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கக்கூடிய ஒன்றாகக் கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rahul Gandhi righthand in Vijay house The political arena will change with Congress Praveen Chakravarthy New calculations in Tamil Nadu politics


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->