பிக் பாஸ் தமிழ் 9 – இந்த வாரம் டபுள் எவிக்ஷன்? பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் காலியாகப்போகும் 2 விக்கெட் யார்?
Bigg Boss Tamil 9 Double eviction this week Who are the 2 wickets that will be evicted from the Bigg Boss house this week
பிக் பாஸ் தமிழ் சீசன் 9, 60 நாட்களைத் தாண்டி சூடுபிடித்துக் கொண்டு செல்கிறது. கடந்த வாரம் எலிமினேஷன் எதுவும் நடைபெறாத நிலையில், இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வார டாஸ்க் "க்ளாசிக் சினிமா vs மாடர்ன் சினிமா" என இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒருவரது நெக்லஸை காக்கவும், எதிரணியின் நெக்லஸை திருடவும் போட்டியாளர்கள் முயற்சி செய்தனர். இதில் க்ளாசிக் அணியினர் மாடர்ன் அணியின் நெக்லஸை வெற்றிகரமாக திருடியுள்ளனர்.
இந்த வாரம் 11 பேர் நாமினேட் ஆகியுள்ளனர். ரம்யா (கேப்டன்), அரோரா, ஆதிரை, வியானா மட்டும் நாமினேஷனில் இல்லை.
வாக்கு நிலைமையின் படி:
-
வினோத் அதிக வாக்குகளுடன் லீடில் – 100% பாதுகாப்பு
-
பார்வதி, திவ்யா, விக்ரம், கம்ருதீன் – பாதுகாப்பான நிலை
-
எஃப்.ஜே, பிரஜன், சாண்ட்ரா – நடுத்தர வாக்குகள், எலிமினேட் ஆவதற்கான சாத்தியம் குறைவு
அதிக ஆபத்தில் உள்ளவர்கள்:
-
சுபிக்ஷா
-
கனி
-
அமித் பார்கவ்
இவர்களில் சுபிக்ஷாவே குறைந்த வாக்குகளுடன் இருப்பதால், இந்த வாரம் வெளியேறும் முதல் உறுதியான பெயர் அவர்தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டபுள் எவிக்ஷன் நடந்தால்,
இரண்டாவது நபர் கனி அல்லது அமித் பார்கவ் ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது.
எனவே, இந்த வாரம் பிக் பாஸில் பெரிய ட்விஸ்ட் காத்திருக்கிறது. பைனல் வரை செல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்த சுபிக்ஷா எலிமினேட் ஆகும் நிலை, பலருக்குமே அதிர்ச்சியாக இருக்கிறது.
English Summary
Bigg Boss Tamil 9 Double eviction this week Who are the 2 wickets that will be evicted from the Bigg Boss house this week