ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட சூரி...! - மண்டாடி படப்பிடிப்பில் நடந்த ‘அந்த’ சம்பவம் வைரல்...! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக பயணம் தொடங்கிய சூரி, இன்று தனிப்பட்ட கதாநாயகனாக மக்களின் இதயத்தில் இடம்பிடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த ‘மாமன்’ படம் பாராட்டுக்களை குவித்தது. அதன் தொடர்ச்சியாக, மதிமாறன் புகழேந்தி இயக்கும் ‘மண்டாடி’ படத்தில் சூரி முதன்மை வேடத்தில் நடித்து வருகிறார்.

எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்போ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் மகிமா நம்பியார் நாயகியாக, ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் நடிகர் சுஹால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மீனவர் படகு போட்டியை மையமாகக் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில், இரவு நேர படப்பிடிப்பின் போது சூரியின் பவுன்சர்கள் ரசிகர்களிடம் கடுமையாக நடந்துகொண்டதாக “எக்ஸ்” தளத்தில் ஒரு ரசிகர் புகார் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில்,“அண்ணா, உங்கள் ஷூட்டிங் எங்கள் ஊரில் நடப்பது மகிழ்ச்சி. ஆனால் இரவு படப்பிடிப்பில் பார்க்க வரும் மக்களிடம் பவுன்சர்கள் கடுமையாக இருக்கிறார்கள். அவர்களிடம் சொல்லி வைக்கவும்” என அவர் கேட்டிருந்தார்.

இந்த குறைபாட்டை பார்த்த சூரி உடனடியாக பதிலளித்து,“தம்பி, உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். தயாரிப்பு குழுவுக்கும் பவுன்சர்களுக்கும் நீங்கள் கூறியதை தெரிவித்துவிட்டேன். இனி அதிக கவனத்துடன் இருப்பார்கள்.

உங்கள் அன்பே எங்களுக்கு பலம். நன்றி”என்று மனமுவந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.மேலும், ரசிகர் குறையை நேரடியாக ஏற்று உடனே நடவடிக்கை எடுத்த சூரியின் இந்த செயல், அவரது எளிமையும் மனிதநேயத்தையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Soori apologizes fan That incident that happened set Mandadi goes viral


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->