அடக்கடவுளே..! பணமோசடி புயலில் அனில் அம்பானி...! - புதியதாக 1,120 கோடி சொத்து முடக்கம்!
Oh my god Anil Ambani money laundering storm New assets 1120 crores frozen
இந்தியாவின் முன்னணி தொழில் பேரரசர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி மீதான நிதி மோசடி வழக்கு தற்போது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ராகாஸ் நிறுவனங்களுக்கு, யெஸ் வங்கி சுமார் 3,000 கோடி ரூபாய் கடன் வழங்கியது. ஆனால் இந்தக் கடனில் பெரும்பகுதி, சட்ட விதிகளை மீறி தொடர்புடைய பிற நிறுவனங்களுக்கு மாற்றியதாக கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதைத் தொடர்ந்து நடந்த விசாரணைகளில், அனில் அம்பானி மொத்தம் 17 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிதி மோசடியில் ஈடுபட்டதாக உறுதி செய்யப்பட்டதால், சி.பி.ஐ. இரண்டு பெரிய வழக்குகளை பதிவு செய்தது.
இதனோடு, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழும் அமலாக்கத்துறை (ED) களம் இறங்கியது.மேலும்,அமலாக்கத்துறை திடீர் நடவடிக்கையாக, முகேஷ் அம்பானியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட இடங்களில் விரிவான சோதனைகளை நடத்தியது.
மேலும், அவர் நேரில் ஆஜராக நடவடிக்கை மேற்கொள்ள சம்மனும் அனுப்பப்பட்டது. அதற்கு இணங்க அவர் ED அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
இதற்கிடையில், அனில் அம்பானியின் நெருங்கிய உதவியாளரும் ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் குமார்ஐ ED அதிகாரிகள் கைது செய்தனர். பண மோசடி வழக்குச் சார்பில், அனில் அம்பானியின் 9,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைத் துறையினர் ஏற்கனவே முடக்கியிருந்தனர்.
இப்போது புதிய திருப்பமாக, ED மேலும் 1,120 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளது. இதனுடன், அனில் அம்பானி மீதான மொத்த சொத்து முடக்கம் 10,117 கோடி ரூபாய் எனப் பெரிதாக உயர்ந்துள்ளது.
English Summary
Oh my god Anil Ambani money laundering storm New assets 1120 crores frozen