இலங்கையின் இருண்ட தருணத்தில் ஒரு ஒளிக்கதிர்: தமிழகம் அனுப்பிய 950 டன் நிவாரணப் பொருட்கள்...! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் உருவான ‘டிட்வா’ புயல், இலங்கையின் வாழ்வாதாரத்தை எச்சரிக்கையின்றி முற்றிலும் புரட்டி போட்டது. வரலாறு எழுதும் வகையில் பெய்த மாபெரும் மழையால், பதுளை, கண்டி, நுவரெல்லியா, மாத்தளை உள்ளிட்ட பல மாவட்டங்கள் பேரழிவின் கொதிநிலையில் சிக்கிக்கொண்டன.

புயலின் கொடூர அச்சுவெட்டில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும், வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் 700-க்கும் மேற்பட்டோர் மாயமானதும் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘டிட்வா’ புயல் தாக்கியதில் மட்டும் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து துன்பத்தில் தவித்து வருகின்றனர். அந்நாட்டில் சிக்கித் தவித்த 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள், இந்திய விமானப்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நாட்டு திரும்பச் செய்யப்பட்டனர்.

இந்த பேரிடரில் இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களும் சொல்லிமுடியாத துயரங்களுக்கு ஆளாகி உள்ளனர்.பேரழிவால் உயிரிழந்தோருக்கு, தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்திருந்தார். மேலும், இலங்கை மக்களின் துயரைத் துடைக்க தமிழக அரசு முழுமையான உதவிகளை மேற்கொள்ளும் என்றும், உணவு மற்றும் மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணங்களை அனுப்ப ஆணையிட்டார்.

அதனடிப்படையில், சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் இருந்து இன்று (சனிக்கிழமை) இலங்கை நோக்கி பெரிய அளவில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.சென்னையில் இருந்து அனுப்பும் கப்பலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் கொடியசைத்து அனுப்பினார்.

அதில் 10,000 போர்வைகள், 10,000 துண்டுகள், 5,000 வேஷ்டிகள், 5,000 சேலைகள், 1,000 தார்பாலின், மேலும் 650 டன் பருப்பு, சர்க்கரை, பால் பவுடர் அடங்கிய அத்தியாவசிய பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

தூத்துக்குடியில் இருந்து 300 டன் பருப்பு மற்றும் சர்க்கரை அனுப்பப்படுகிறது.மொத்தத்தில், புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சார்பில் 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. நெருக்கடியான நேரத்தில் தமிழகத்தின் மனிதநேய கைகொடை என விரிவாக பாராட்டப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ray light Sri Lankas darkest moment 950 tons relief supplies sent by Tamil Nadu


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->