சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்திற்கு அருகில் தீ விபத்து; பதறியோடிய பக்தர்கள் பக்தர்களால் பரபரப்பு..!
Fire breaks out near Sabarimala Ayyappa shrine
கேரளா மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் கார்த்திகை மாதத்திற்கான பூஜைக்கு நடைதிறக்கப்பட்ட நிலையில், பல்லாயிர கணக்கான பக்தர்கள் தினமும் ஐயப்பனை தரிசனம் செய்ய சபரிமலைக்கு செல்கின்றனர்.
இவ்வாறு ஐயனை காண பக்தர்கள் வருகையை ஒட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதானத்தில் உள்ள மரங்களில் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 08.20 மணி அளவில் அலங்காரம் செய்யப்பட்ட ஆலமரத்தில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த பக்தர்கள் பீதியில் சிதறி ஓடத் தொடங்கியதால் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் சன்னிதான தீயணைப்பு படை கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்துள்ளனர். அங்கு பரவிய தீயை மேலும், பரவ விடாமல் துரிதமாக செயல்பட்டு அணைத்த்துள்ளனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில்,பக்தர்கள் பெரும்மூச்சு விட்டுள்ளனர்.
English Summary
Fire breaks out near Sabarimala Ayyappa shrine