ரூ.4.25 கோடி சர்ச்சை...! - கவுதம் மேனன் மேல் முறையீடு தள்ளுபடி...! நடந்தது என்ன...?
4point25 crore controversy Gautham Menon appeal dismissed What happened
இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், படத் தயாரிப்பாளரிடமிருந்து முன்பணமாக பெற்ற ரூ.4.25 கோடியை திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, அதே உத்தரவை உறுதிப்படுத்தியுள்ளது.

ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனத்தை நடத்தும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார், 2008ஆம் ஆண்டு நடிகர் சிம்புவை வைத்து தயாரிக்க இருந்த படத்திற்காக கவுதம் வாசுதேவ் மேனனுடன் ஒப்பந்தம் செய்து, ரூ.4.25 கோடியை முன்பணமாக வழங்கியதாக தெரிவித்தார்.
ஆனால், ஒப்பந்தப்படி படம் இயக்கப்படாததுடன், அந்த தொகையும் திருப்பி வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டி அவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, 2022ஆம் ஆண்டு அந்த தொகையை தயாரிப்பாளருக்கு திருப்பிச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
இதனை எதிர்த்து கவுதம் வாசுதேவ் மேனன் மேல்முறையீடு செய்திருந்தார்.நீதிபதிகள் பி. வேல்முருகன் மற்றும் கே.ஜி. திலகவதி அமர்வு முன் நடைபெற்ற விசாரணையில், தயாரிப்பாளர் தரப்பின் வாதங்களை ஏற்று, முன்னர் வழங்கப்பட்ட உத்தரவை நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.
அதன்படி, ரூ.4.25 கோடியை வட்டியுடன் சேர்த்து திருப்பிச் செலுத்த வேண்டும் என்று இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
English Summary
4point25 crore controversy Gautham Menon appeal dismissed What happened