விஜயை கொடூரமாகக் சீண்டும் சீமான்- திருமா..! மீண்டும் பிணதிண்ணி அரசியலை கையில் எடுத்த திருமா?அரசியல் விமர்சகர் உடைக்கும் பகீர் பின்னணி..!
Seeman Thiruma brutally attacks Vijay Has Thiruma taken up the politics of corpses again Political commentator breaks down the background of the bagir
தமிழக அரசியலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) எழுச்சி பெற்றுள்ள நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தொடர்ந்து விஜயை கடுமையாக விமர்சித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் விவாதம் அதிகரித்துள்ளது.
முதலில், சீமான் விஜயை எதிர்த்து பேசியது திராவிடம் vs தமிழ்தேசியம் எனும் கொள்கை வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டதாகக் கருதப்பட்டது. ஆனால், பின்னர் அவரது பேச்சு தீவிரமாகி, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பின் மேலும் தாக்குதலாக மாறியது.
அதேபோல், திருமாவளவன் விஜயை “பாஜகவால் அரசியலுக்கு தள்ளப்பட்டவர்” என்றும், “தீய சக்தி” என்றும் விமர்சித்து வருகிறார். “விஜய் உயிர்பலிகளை வைத்து அரசியல் ஆதாயம் தேடுகிறார், வழக்கமான திமுக வெறுப்பு அரசியலைத்தான் செய்கிறார்” என்று குற்றஞ்சாட்டிய அவர், “விஜய் பாஜகவின் வலையில் சிக்கக்கூடாது” என்கிற கரிசன எச்சரிக்கையையும் முன்வைத்துள்ளார்.
இந்த நிலையில், அரசியல் விமர்சகர் மதியழகன் கருத்து தெரிவிக்கையில்,“திருமாவளவன் பாஜக வலை என்று சொல்கிறார். ஆனால், கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரிய TVK பாஜகவுக்கு போகிறார்கள் எனச் சொல்வதில் லாஜிக் இல்லை. வேங்கை வயல் விவகாரத்தில் திருமாவளவனே சிபிஐ விசாரணை கேட்டார். அப்போது அது நியாயமான கோரிக்கையாக இருந்தது. அதேபோல் கரூர் விவகாரத்தில் விஜய் கேட்டதும் தவறில்லை” என்றார்.
அவர் மேலும் கூறினார்:“மாநில காவல்துறை மீது குற்றச்சாட்டுகள் வருவதால், ஒன்றிய அரசின் கீழ் உள்ள சிபிஐ விசாரணைக்கு கேட்பது தவறல்ல. மாநில அரசு கூட சில சமயங்களில் (உதா: மடப்புரம் காவலர் அஜித் குமார் வழக்கு) சிபிஐக்கு விசாரணை ஒப்படைத்தது. ஆனால், விஜய் கேட்கும்போது அதையே பாஜக வலை எனச் சொல்வது சந்தர்ப்பவாதம்.”
மதியழகனின் கூற்றுப்படி,“விஜயின் அரசியல் வருகையால் தங்களது எதிர்காலம் பாதிக்கப்படும் என்கிற பயத்தால் சீமான், திருமாவளவன் இருவரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், இவர்களின் கட்சியில் இருந்தவர்கள் தொகுதியாக TVK-க்கு தாவிவருவதும் இவர்களின் கோபத்திற்குக் காரணம். அதோடு திமுக தலைமையை மகிழ்வித்து அரசியல் நெருக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்ற விருப்பமும் இருக்கிறது.”
அவர் சுட்டிக்காட்டியது,“திருமாவளவன் தற்போது திமுகவில் தலித் பிரிவு ‘ஐடி விங் தலைவர்’ போல செயல்படுகிறார். திமுகவுக்கு வரிந்து பேசுவதில் அவர் டி.கே.எஸ். இளங்கோவனுக்கு போட்டியாளர் எனக் கருதப்படுகிறார்.”
மொத்தத்தில், அரசியல் பகுப்பாய்வாளர்கள் கருதுவதாவது:“சீமான் மற்றும் திருமாவளவன் விஜயின் அரசியல் எழுச்சியால் ஏற்பட்ட அச்சத்திலும், திமுகவுடன் நெருக்கம் நிலைநிறுத்தும் ஆர்வத்திலும் இருந்து அவரது மீது அரசியலைத் தாண்டிய தனிப்பட்ட தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள்” என்பதாகும்.
English Summary
Seeman Thiruma brutally attacks Vijay Has Thiruma taken up the politics of corpses again Political commentator breaks down the background of the bagir