தீபாவளி பாக்ஸ் ஆபீஸ் போர்: தீபாவளி ரேஸில் இருந்து விக்னேஷ் சிவனின் LIK விலக இதுதான் காரணம்?
Diwali Box Office War Is this the reason why Vignesh Shivan LIK dropped out of the Diwali race
இந்த ஆண்டின் தீபாவளி பாக்ஸ் ஆபீஸ் பேட்டில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.முதலில், பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டியூட்’ (Dude) திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.அதன் பின்னர், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கிய ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படமும்அதே நாளில், அக்டோபர் 17ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்புக்குப் பிறகு,“இரண்டு படங்களும் ஒரே நாளில் மோதினால்,பாக்ஸ் ஆபீசில் பெரிய பாதிப்பு ஏற்படும்”என்று ரசிகர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் கவலைப்பட்டனர்.
இந்நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம்,தீபாவளிக்கான வெளியீட்டை எந்த விலைக்கும் விட்டு கொடுக்காமல்,‘டியூட்’ படத்தையே முன்னுரிமையாக வைக்க தீர்மானித்துள்ளது.இதனால், விக்னேஷ் சிவன் தானே வெளியிட்ட அறிக்கையில்,“மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிடிவாதமாக நிற்க,எங்களின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படம்தீபாவளி வெளியீட்டில் இருந்து பின் வாங்குகிறது”என்று தெரிவித்துள்ளார்.மேலும் படத்திற்கான புதிய ரிலீஸ் தேதியாக டிசம்பர் 18ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பொங்கலுக்கு அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது.ஆனால், பின்னர் மாற்றங்கள் ஏற்பட்டு,மைத்ரி மூவிஸ் தயாரித்த ‘குட் பேட் அக்லி’ படம் இடம்பிடிக்கவில்லை.தாமதமான வெளியீட்டின் காரணமாக அந்தப் படம் எதிர்பார்த்த வசூலை ஈட்ட முடியவில்லை.அந்தப் பிழையை இந்த முறைத் தவிர்க்கவே,தீபாவளி பாக்ஸ் ஆபீஸில் ‘டியூட்’ க்கு முன்னுரிமை கொடுத்துள்ளனர்.
‘டியூட்’ படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிடுகிறது.படத்தின் இயக்குநர் கீர்த்தீஸ்வரன்,“ரஜினிகாந்தை மனதில் வைத்து பிரதீப்பின் கதாபாத்திரத்தை வடிவமைத்தேன்”என்று சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
‘குட்டி தனுஷ்’ என அழைக்கப்படும் பிரதீப்,இப்போது ‘குட்டி ரஜினி’ என ரசிகர்களிடையே பேசப்படுகிறார்.படத்தின் சில பாடல்கள் ஆரம்பத்தில் விமர்சனங்களை சந்தித்தாலும்,தற்போது இளைஞர்களிடம் வைரலாகி வருகிறது.பிரதீப் ஒரு நாய்க்கு கொடுத்த லிப் கிஸ் காட்சி கூட சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த ஆண்டு பிரதீப் நடித்த ‘டிராகன்’ படம் மொத்தம் ₹150 கோடி வசூலைப் பெற்றது.டியூட்’ படம் ஹிட் ஆனால்,₹150 – ₹200 கோடி வரை வசூல் ஈட்டும் என பாக்ஸ் ஆபீஸ் நிபுணர்கள் கணிக்கிறார்கள்.
ஆனால், தீபாவளிக்கு பல இளம் நடிகர்களின் படங்களும் வெளியாக இருப்பதால்,‘டியூட்’ படத்தின் வசூலுக்கு சவாலாக இருக்கலாம்.மேலும், LIK படம் டிசம்பர் 18ம் தேதி ஹாலிவுட் ‘அவதார்’ படத்துடன் மோதவிருக்கிறது,இதுவும் விக்னேஷ் சிவன் படத்துக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது.
இந்த தீபாவளியில், பாக்ஸ் ஆபீஸ் மைதானத்தில்முழு கவனமும் பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ மீது திரும்பியுள்ளது.‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ பின் வாங்கியதால்,‘டியூட்’ படத்திற்கு வலுவான தொடக்க வசூல் கிடைக்கும் எனதிரையுலகமும் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
English Summary
Diwali Box Office War Is this the reason why Vignesh Shivan LIK dropped out of the Diwali race