இணையத்தை குலுக்கிய ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு! -மிட்செல் மார்ஷ் இரட்டை கேப்டன் அவதாரம்! - Seithipunal
Seithipunal


ஆசியக் கோப்பை டி20 சாம்பியன்ஷிப் வெற்றியுடன் இந்திய அணி உற்சாகத்தில் இருக்கும் வேளையில், அடுத்த சவாலாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 2 டி20 தொடர்கள் காத்திருக்கின்றன. இந்திய அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், ஒருநாள் தொடரில் சுப்மன் கில் கேப்டனாகவும், டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும் பொறுப்பேற்றுள்ளனர்.

இதேபோல், ஆஸ்திரேலிய அணியும் தங்களது படைகளை தயாராக வைத்துள்ளது. மிட்செல் மார்ஷ் தலைமையில் ஒருநாள் மற்றும் டி20 இரு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அனுபவமும் இளமையும் இணைந்த ஆஸ்திரேலிய அணிகள், இந்தியாவுக்கு கடின சவாலாக இருக்குமென நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஆஸ்திரேலிய ஒருநாள் அணி
மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஓவன், கூப்பர் கோனொலி, மேத்யூ ரென்ஷா, பென் டுவார்ஷுயிஸ், மேட் ஷார்ட், நாதன் எல்லிஸ், மிட்செல் ஸ்டார்க், கேமரான் கிரீன், ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசல்வுட்.
ஆஸ்திரேலிய டி20 அணி
மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட், சேவியர் பார்ட்லெட், டிம் டேவிட், பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ குஹ்னெமன், மிட்செல் ஓவன், மேட் ஷார்ட், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆடம் ஜாம்பா.
இந்தியா vs ஆஸ்திரேலியா மோதல். உலகக் கிரிக்கெட்டில் எப்போதும் தீப்பொறி பாயும் போட்டி. இந்த முறை யார் மேலோங்கப் போகிறார்கள் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Australia team announcement shook internet Mitchell Marsh dual captain


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->