பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு: திவாகர் – ரம்யா ஜோ இடையே கடுமையான வாக்குவாதம்!கலவர பூமியாக மாறிய பிக் பாஸ் வீடு! - Seithipunal
Seithipunal


பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தினமும் புதிய திருப்பங்களால் ரசிகர்களை கவர்ந்துவருகிறது. சமீபத்திய எபிசோடில் ‘வாட்டர்மிலன் ஸ்டார்’ திவாகர் மற்றும் சக போட்டியாளர் ரம்யா ஜோ இடையே நடந்த கடுமையான வாக்குவாதம், வீட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் என்றாலே சண்டைகளுக்கு பஞ்சம் இல்லை. புரோமோவில் அதிகமாக காணப்பட வேண்டும் என்ற எண்ணம் பல போட்டியாளர்களின் மனநிலையில் நீண்டகாலமாக உள்ளது. அதேபோலவே சீசன் 9-இலும் போட்டியாளர்கள் சண்டைகளை ஒரு தந்திரமாக பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, எப்படியாவது பேமஸ் ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் வீட்டுக்குள் சென்ற திவாகர், வந்த முதல் நாளிலிருந்தே சண்டைபோட்டு வருகிறார்.

பிசியோதெரபி நிபுணரான திவாகர், முன்பு சக போட்டியாளர் கெமியுடன் தனது தொழிலை குறைத்து மதிப்பிட்டதாக குற்றம் சாட்டி சண்டை போட்டார். மேலும், மற்ற போட்டியாளர்கள் நடிகர்கள், விஜே, ஆர்ஜேக்கள் பல ஆண்டுகளில் சம்பாதித்த பெயர், புகழை தானோ ஒரே ஆண்டில் சம்பாதித்துவிட்டதாக தற்பெருமை பேசிக்கொண்டிருப்பதால், பலர் இவரை விமர்சித்தனர்.

இந்நிலையில், சமீபத்திய எபிசோடில் திவாகர் – ரம்யா ஜோ இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது. கெமி மற்றும் பிரவீன் குறித்த விவாதத்தின் போது, திவாகர் தொடர்ந்து இடையூறு செய்ததால், ரம்யா ஜோ கடுப்படைந்து, “கத்தற வேலையெல்லாம் இங்க வச்சிக்க கூடாது” என எதிர்கொண்டார். இதற்கு திவாகர், “மரியாதையா பேசு… படிச்சிருக்கியா, நாகரீகம் தெரியுமா?” என்று கடுமையாக சவால் விட்டார்.

படிப்பை குறைத்து பேசும் திவாகரின் வார்த்தைகளால் ரம்யா ஜோக்கு ஆதரவாக கம்ருதீன், எஃப்.ஜே உள்ளிட்ட மற்ற போட்டியாளர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சூழ்நிலை தீவிரமடைந்து, திவாகர் கப்சிப்னு ஆனார்.

படிப்பு குறித்த இந்த விவாதம் காரணமாக, இன்றைய எபிசோடு பிக் பாஸ் வீட்டில் பெரிய திருப்பம் மற்றும் சூடான சம்பவங்களை ரசிகர்கள் கண்டு களிக்கப்போகிறார்கள் என்பது உறுதியாக தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bigg Boss house in turmoil Fierce argument between Diwakar and Ramya Jo Bigg Boss house turns into a riot


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->