மஹிந்திரா Formula E காரை சோதித்த அஜித்! "மேலும் தகவல்களுக்கு காத்திருங்கள்!" -அதிரடி பதிவு
Ajith tests Mahindra Formula E car Stay tuned for more information Athiradi post
சினிமா திரையில் தன் அதிரடி நடிப்பால் ரசிகர்களை மயக்கும் நடிகர் அஜித் குமார், தற்போது கார் பந்தய உலகிலும் அதே வேகத்தில் செம்ம புயல் போல் பாய்ந்து வருகிறார்.
அண்மையில் ஸ்பெயினில் நடைபெற்ற 24 மணி நேர சர்வதேச கார் பந்தயத்தில் தனது அணியுடன் இணைந்து 3வது இடத்தை கைப்பற்றி இந்தியாவின் பெருமையை உயர்த்தினார்.

இதில் தாமதமின்றி, இந்த ஆண்டு இறுதியில் மலேசியாவில் மற்றும் 2026-ஆம் ஆண்டு அபுதாபியில் நடைபெறவுள்ள முக்கியமான பந்தயங்களிலும் ‘அஜித் குமார் ரேசிங்’ அணி பங்கேற்க இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஸ்பெயினில் நடைபெற்ற சோதனை நிகழ்ச்சியில், அஜித் குமார் மஹிந்திரா Formula E ஜெனரேஷன் 2 காரை நேரடியாக ஓட்டி, தனது அதிரடி திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
அவரின் பந்தய காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் சூறாவளி போல் வைரலாகி வருகின்றன. இதை தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ள Ajith Kumar Racing Team, “மேலும் சுவாரஸ்யமான தகவல்களுக்கு காத்திருங்கள்!” என்று பதிவிட்டுள்ளது.
English Summary
Ajith tests Mahindra Formula E car Stay tuned for more information Athiradi post