நீதியின் நெஞ்சம் நிமிர்ந்த நாள்! - தன்னடக்கம் குறித்து வைரமுத்து பாராட்டு
day when justice stood firm Vairamuthu praised his self control
உச்ச நீதிமன்றத்தில் இன்று பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடந்தது. தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது ஒரு வழக்கறிஞர் திடீரென காலணி வீச முயன்றார்.அந்த வழக்கறிஞர் “சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா சகிக்காது!” என்று முழக்கமிட்டார். இதனால் நீதிமன்றம் சில நொடிகள் பதட்டமானது.
உடனே பாதுகாப்பு பணியாளர்கள் விரைந்து சென்று அந்த வழக்கறிஞரை வெளியேற்றினர்.ஆனால், தலைமை நீதிபதி கவாய் அதில் எந்தத் தயக்கமுமின்றி அமைதியாகப் பிரதிகரித்தார். “இதுபோன்ற விஷயங்கள் நம்மை சிதறவிடக் கூடாது. நானும் சிதற மாட்டேன். என் கவனம் நீதிக்கும், விசாரணைக்கும் மட்டும்!” என்று தெளிவாகக் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து எந்த இடையூறும் நடக்காதபடி, வழக்கின் விசாரணையை தன்னம்பிக்கையுடன் அவர் தொடர்ந்து மேற்கொண்டார்.இந்த சம்பவம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டதாவது,"
உச்சநீதிமன்றத்
தலைமை நீதியரசர்
@JusticeBRGavai மீது
அநாகரிகத்தை
வீசமுயன்றது கண்டு
அதிர்ந்துபோனேன்
இது
முறைசெய்யும் நீதித்துறையைக்
கறைசெய்யும் களங்கமாகும்
வரம்புமீறிய வழக்கறிஞரை
வன்மையாகக் கண்டிக்கிறேன்
பிற்போக்குத்தனம்தான்
இந்த அவமானச் செயலுக்கு
அடிப்படை என்று அறிகிறேன்
தென்னிந்தியாவில்
பிற்போக்குச் சக்திகளைப்
பிடரிபிடித்துத் தடுத்து
நிறுத்தியதைப்போல
வடஇந்தியாவில்
செய்யத் தவறிவிட்டார்கள்
அந்தச் சாத்திரத்தின்
ஆத்திரம்தான் இது
காலில் அணியவேண்டியதைக்
கையில் அணிந்தபோதே
அவர் அறிவழிந்துபோனார் என்று
அறிய முடிகிறது
அதை
மென்மையாகக் கையாண்ட
நீதியரசரின் சான்றாண்மையைப்
பெரிதும் போற்றிப்
பெருமிதம் கொள்கிறோம்
நீதியரசரின் மாண்பு
அவரை மன்னித்துவிட்டது
வீச முயன்ற பொருளும்
அவரிடமே
ஒப்படைக்கப்பட்டு விட்டது
வீசிய பொருளைக்கூட மறந்துவிடலாம்
அவர் பேசியபொருளை
மறந்துவிட முடியாது
அது
நாட்டின் பெரும்பான்மை மக்களைக்
காலங்காலமாய்க்
கழுத்தில் மிதித்து
அழுத்திக் கொண்டிருக்கும்
பழைய பொருளாகும்
பழையன கழிய வேண்டாமா?" என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
day when justice stood firm Vairamuthu praised his self control