தேர்தல் நேரத்தில் சசிகலாவின் புதிய கட்சி...! - பெயர் அறிவிப்பால் அரசியல் பரபரப்பு
Sasikala New Party During Election Season Political Buzz Triggered by Name Announcement
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் அரங்கில் பரபரப்பு அதிகரித்து வருகிறது. தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்த சூழலில், சமீபத்தில் அரசியல் களத்தில் மீண்டும் செயலில் இறங்கிய சசிகலா, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 அன்று தனது புதிய கட்சிக்கான கொடியை சசிகலா அறிமுகப்படுத்தியிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக இன்று தனது கட்சியின் பெயரையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அவரது புதிய அரசியல் அமைப்புக்கு “அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்” என பெயர் சூட்டப்பட்டதாக அவர் அறிவித்தார்.
தொண்டர்கள் தொடங்கிய இந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு மக்கள் நல அரசியலை முன்னெடுக்க உள்ளதாகவும் சசிகலா தெரிவித்தார்.
English Summary
Sasikala New Party During Election Season Political Buzz Triggered by Name Announcement