'நாங்கள் எப்போதும் தோப்பு'...! - தேர்தலில் ‘தென்னந்தோப்பு’ சின்னத்தில் சசிகலா போட்டி அறிவிப்பு...!
We always Grove Sasikala announces she contest election under Coconut Grove symbol
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான கடந்த பிப்ரவரி 24 அன்று தனது புதிய அரசியல் இயக்கத்தின் கொடியை அறிமுகப்படுத்திய சசிகலா, இன்று தனது கட்சியின் பெயரையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
தனது புதிய கட்சிக்கு “அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்” (அ.இ.பு.த.ம.மு.க.) என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த இயக்கம் தொண்டர்களால் தொடங்கப்பட்ட கட்சி என்றும், அதில் தன்னை இணைத்துக் கொண்டு மக்கள் அரசியலை முன்னெடுக்க உள்ளதாகவும் சசிகலா தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசியல் சூழல் முழுவதும் மாற்றமடைந்து விட்டதாக குறிப்பிட்டார். மேலும், ஒருகாலத்தில் தொண்டர்கள் தொடங்கிய இயக்கத்தில் எம்.ஜி.ஆர். தன்னை இணைத்துக் கொண்டு அதை மக்கள் இயக்கமாக மாற்றியதை நினைவுகூர்ந்தார்.
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் தனது கட்சி “தென்னந்தோப்பு” சின்னத்தில் போட்டியிடும் என்றும், ஒத்த கருத்து கொண்ட அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.
தனித்து போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “நாங்கள் எப்போதும் தோப்புடன் தான் இருப்போம்” என்று சிரித்தபடி கூறி கூட்டணி அரசியலுக்கான சைகையை வெளிப்படுத்தினார்.
English Summary
We always Grove Sasikala announces she contest election under Coconut Grove symbol