கருவில் இருக்கும் குழந்தையின் சாபம் உன்னை தொடரும்! - ஜாய்கிரிஸ்டில்டாவின் பரபரப்பு பதிவு வைரல்...! - Seithipunal
Seithipunal


'ஜாய்கிரிஸ்டில்டா என்பவர், “ஜில்லா”, “வேலைக்காரன்”, “மெர்சல்” உள்ளிட்ட மிகப்பெரிய வெற்றி  படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியவர் '. இவர் சமீப ஆண்டுகளில் பிரபல சமையல் கலைஞர் 'மாதம்பட்டி ரங்கராஜ்' உடன் நெருக்கமாக பழகியிருந்தார்.

ஏற்கனவே திருமணமான நிலையில் இருந்த ரங்கராஜ், ஜாய்கிரிஸ்டில்டாவுடன் 2வது திருமணம் செய்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து, ஜாய்கிரிஸ்டில்டா தானே இதை உறுதிப்படுத்தி, கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தார். ஆனால் சில வாரங்களுக்குள் சம்பவம் திருப்பம் பெற்றது.

மேலும், “மாதம்பட்டி ரங்கராஜ் என்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார்” என்று தெரிவித்து , அவர் சென்னை  காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிரடி புகார் அளித்தார்.அந்த மனுவில், “என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ்தான் பொறுப்பு. ஆனால் இப்போது அவர் எந்தப் பொறுப்பையும் ஏற்காமல் ஒதுங்கி விட்டார்” என குற்றஞ்சாட்டினார்.

இதையடுத்து,காவலர்கள் விசாரணை தொடங்கியுள்ளனர். இதில் ஜாய்கிரிஸ்டில்டா மீது ஏற்கனவே 6 மணி நேரம் தீவிர விசாரணை நடைபெற்றுள்ளதுடன், விரைவில் மாதம்பட்டி ரங்கராஜ் மீதும் விசாரணை நடைபெறவுள்ளது.இந்நிலையில், ஜாய்கிரிஸ்டில்டா தனது சமூக வலைதளத்தில் பரபரப்பான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில்,“ஒருத்தன் குற்ற உணர்ச்சியே இல்லாமல் அலைகிறான்... பெருமையாக தலையெழுப்பி நடக்கிறான். மனிதாபிமானம் இல்லாதவனின் வாழ்க்கையில் அமைதி இருக்காது.

கருவில் இருக்கும் குழந்தையின் சாபம் நிழலாகவே உன்னை தொடரும்”என்ற கடுமையான வார்த்தைகளில் அவர் பதிவிட்டுள்ளார்.இந்த பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே இணையத்தில் வைரலாகி, திரையுலகத்திலும் ரசிகர்களிடமும் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

curse unborn child follow you Joycristaldas sensational post goes viral


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->