பஹல்காம் தாக்குதலில் படுகாயமடைந்த தமிழர்: நேரில் சென்று ஆறுதல் சொன்ன தமிழக சிறப்பு பிரதிநிதி..! - Seithipunal
Seithipunal


ஜம்மு – காஷ்மீர் பஹல்காமில் கடந்த மாதம் 22-ஆம் தேதி தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த பரமேஸ்வரன் என்பவர், சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின் பேரில், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். அத்துடன், பரமேஸ்வரனுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்துள்ளார்.

மேலும், படுகாயமடைந்த பரமேஸ்வரனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் இதர விஷயங்களுக்கான அனைத்து செலவினங்களையும் தமிழ்நாடு அரசு ஏற்கும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்ததாக ஏ.கே.எஸ்.விஜயன் தெரிவித்துள்ளார். குறித்த நிகழ்வின் போது பரமேஸ்வரனின் பெற்றோர், தமிழ்நாடு அரசின் ஆணையாளர் ஆஷிஷ் குமார் உடன் இருந்தமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu special representative visited and consoled a Tamil man was seriously injured in the Pahalgam attack


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->