திருப்பூரில் பயங்கர தீ விபத்து!
Tripur PalavanjiPalaiyam Fire accident
திருப்பூர் : பின்னலாடை நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் எரிந்து நாசமடைந்துள்ளது.
திருப்பூர் : பலவஞ்சிபாளையம் அருகே தனியாருக்குச் சொந்தமான பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வரும் இந்த நிறுவனத்தில் இன்று மாலை சுமார் 5.30 மணி அளவில் கரும்புகை எழுந்துள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தொழிலாளர்கள் யாரும் பணிக்குவரவில்லை.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 20க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
முதல்கட்ட தகவலின்படி, இந்த தீ விபத்தில் ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள், பின்னலாடைகள் எரிந்து நாசமடைந்தது.
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Tripur PalavanjiPalaiyam Fire accident