சர்ச்சை பேச்சுக்கு பதில்! நான் ராணுவ குடும்பத்தில் பிறந்தவன்... ராணுவ வீரர்களை மதிப்பவன்...! - செல்லூர் ராஜு
Response controversial speech I was born in a military family I respect soldiers Sellur Raju
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இந்திய ராணுவத்திற்கு மரியாதையை செலுத்தும் விதமாக சென்னையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்குதான் திமுகவினர் நன்றி தெரிவிக்க வேண்டும், இந்திய ராணுவத்திற்கு அல்ல என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இன்று காலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தபொது அவர் குறிப்பிட்டதாவது, "ராணுவ வீரர்கள் என்ன எல்லையில போய் சண்டையா போட்டாங்க? போருக்கு தேவையான தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் வாங்கிக் கொடுத்தது மத்திய அரசுதான். பாதுகாப்புத்துறை அமைச்சர் , உள்துறை அமைச்சர் ஆகியோர் கேட்ட ஆயுதங்களை பிரதமர் மோடி வாங்கிக் கொடுத்தார்.
எனவே திமுகவினர் பிரதமர் மோடியைதான் பாராட்ட வேண்டும். இவர்களின் நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்" செல்லூர் ராஜு தெரிவித்தார்.ராணுவ வீரர்கள் எல்லையில போய் சண்டை போட்டார்களா? என்று செல்லூர் ராஜு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ராணுவ வீரர்கள் தொடர்பாக சர்ச்சையாக பேசியது தொடர்பாக செல்லூர் ராஜு தற்போது விளக்கம் அளித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப்பதிவில், "செய்தியாளர்கள் சந்திப்பில் இரவு பகல் பார்க்காமல் நாட்டுக்காக பாடுபடும் நம்ம இராணுவ வீரர்களை மதிக்காமல் பேசியதாக வந்துள்ள செய்திகள் தவறு ,எங்க பொதுச் செயலாளர் அண்ணன் EPS பாராட்டியுள்ளார் , எங்க குடும்பமே முன்னால் இராணுவ வீரர்களை கொண்டது இன்று நேற்று நாளை எப்பொழுது மதிக்கிரேன் !!!" என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
Response controversial speech I was born in a military family I respect soldiers Sellur Raju