தலைமறைவான கள்ளக்காதலனின் முகவரி தராததால் ஆத்திரத்தில் பெண் செய்த சம்பவம்: போலீசார் வலைவீச்சு..! - Seithipunal
Seithipunal


தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் என்.எஸ்.ஓ நகரை சேர்ந்தவர் மண்டை கார்த்திக். வயது 40. சரித்திர பதிவேடு குற்றவாளியான இவருக்கும் திருபுவனம், கன்னித்தோப்பை சேர்ந்த ரமேஷின் மனைவி 35 வயதுடைய ரேவதிக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால் ரேவதி, கணவர் ரமேஷ் மற்றும் மூன்று குழந்தைகளை பிரிந்து கார்த்திக்குடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கள்ளக்காதலன் கார்த்திக், ரேவதியுடன் பழகுவதை தவிர்த்து, அவரது வீட்டுக்கு செல்வத்தையும் தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரேவதி, கார்த்திக் எங்கு இருக்கிறாரோ அங்கெல்லாம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட்டுள்ளார்.

இதையடுத்து, கார்த்திக்கின் உறவினர்கள் அவரை, திருப்பூருக்கு வேலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், தலைமறைவான கள்ளக்காதலன் கார்த்திக்கை தேடி வந்த ரேவதி, திருவிடைமருதூரில் உள்ள கார்த்திக்கின் அண்ணன் அன்பரசன் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் 'எங்களை பிரித்தது நீங்கள் தான், கார்த்தி எங்கே இருக்கிறார், எனக்கு உடனே அவரது முகவரியை கொடுங்கள்' என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், நள்ளிரவு அன்பரசன் வீட்டு வாசலில் இருந்த அவரது பைக் திடீரென தீப்பற்றி எரிந்தந்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்துள்ளனர். இதனை தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

பொலிஸாரின் விசாரணையில் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது, இருசக்கர வாகனத்தை நள்ளிரவில் ரேவதி தீ வைத்து, கொளுத்தி விட்டு செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரேவதியை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The incident that the woman did in anger because she did not give the address of the absconding fake lover


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->