ODI கிரிக்கெட்: விராட் கோலியின் 12 வருட சாதனையை தகர்த்தெறிந்த ஸ்மிருதி மந்தனா..! - Seithipunal
Seithipunal


இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்தது. இதில் இந்திய அணியின் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதம் அடித்த இந்தியர் என்ற பெருமையை பெற்ற்றுள்ளதோடு, விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.  

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கி 412 ரன்களை குவித்தது. இமாலய இலக்காக இருந்தாலும் மந்தனாவின் மின்னல் வேக சதம், இந்திய ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது. இந்தப் போட்டியின் முதல் பாதியில், ஆஸ்திரேலிய மகளிர் அணி, இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த அணியும் செய்யாத சாதனையை நிகழ்த்தியது.

அதாவது, ஆஸ்திரேலிய அணியில் நான்காவது வீராங்கனையாகக் களமிறங்கிய பெத் மூனி, இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்துள்ளார். அவர் அதிரடியாக ஆடி, 138 ரன்கள் குவிக்க, ஆஸ்திரேலிய அணி 47.5 ஓவர்களில் 412 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.இதில், பெத் மூனி 57 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார்.

இதன் மூலம், மகளிர் ஒருநாள் போட்டிகளில் இந்தியாவிற்கு எதிராக 400 ரன்களுக்கு மேல் குவித்த முதல் அணி என்ற வரலாற்றுச் சாதனையை ஆஸ்திரேலியா படைத்துள்ளது. இதற்கு முன்பு, இந்தியாவிற்கு எதிராக அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 371 ரன்களாக இருந்தது, அந்தச் சாதனையை நிகழ்த்தியதும் ஆஸ்திரேலியாதான்.  

இரண்டாம் பாதியில், மந்தனா வெறும் 50 பந்துகளை மட்டுமே சந்தித்து, தனது சதத்தை நிறைவு செய்துள்ளார். இதன் மூலம்  ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் பிரமிக்க வைத்துள்ளதோடு, ஒருநாள் போட்டிகளில் இந்தியாவிற்காக அதிவேக சதம் அடித்த வீரர் என்ற விராட் கோலியின் 12 ஆண்டுகால சாதனையை அவர் தகர்த்தெறிந்துள்ளார்.

ஸ்மிருதி மந்தனாவின் இந்த சாதனை, இந்திய அளவில் மட்டுமல்ல, உலக அளவிலும் ஒரு மைல்கல்லாகப் பதிவாகியுள்ளது. மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிவேக சதம் இதுவாகும். ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் மெக் லானிங், 2012 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக 45 பந்துகளில் அடித்த சதமே இப்போதும் முதலிடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Smriti Mandhana breaks Virat Kohlis 12 year old record in ODI cricket


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->