முதல்வர் வேட்பாளர் விவகாரம்: காங்கிரஸ் கட்சிக்கு தேஜஸ்வி திடீர் நிபந்தனை..! - Seithipunal
Seithipunal


இந்த வருட இறுதியில் பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் களமிறங்கப் போவதில்லை என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. 

பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணிக்கு எதிராக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் இணைந்து ‘மெகா கூட்டணி’யை உருவாக்கியுள்ளன. சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தக் கூட்டணிக்குள் தற்போது முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த சர்ச்சை பூதாகரமாகியுள்ளது.

குறிப்பாக, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ்தான் முதல்வர் வேட்பாளர் என அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். மறுபுறம்  கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியும் இதே கருத்தை கூறி வருகின்றனர். இதனால் தற்போது காங்கிரஸ் மவுனம் காத்து வருகிறது. 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில், பீகாரில் யாத்திரை மேற்கொண்டார். அப்போது, முதல்வர் வேட்பாளர் குறித்து அவரிடம் கேட்கப்பட்டதற்கு, அவர் அதற்கு நேரடியாகப் பதிலளிக்காமல், இந்தியா கூட்டணித் தலைவர்கள் பரஸ்பர மரியாதையுடன் செயல்படுவதாகக் கூறினார். இது, தேஜஸ்வியை முதல்வர் வேட்பாளராக ஏற்பதில் காங்கிரசுக்குத் தயக்கம் இருப்பதையே காட்டுவதாகக் கருதப்படுகிறது. அத்துடன், தங்கள் யாத்திரைக்குக் கிடைத்த வரவேற்பால், அதிக இடங்களைக் காங்கிரஸ் கேட்க திட்டமிட்டுள்ளதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையிலேயே, தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் நாங்கள் தேர்தலைச் சந்திக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அத்துடன், முகம் இல்லாத கட்சியா நாங்கள்? தொகுதிப் பங்கீடு முடிந்ததும், முதல்வர் வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்படும் என்றும், இன்னும் சில நாட்களில் இதுகுறித்து அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தேஜஸ்வியின் இந்தப் பேச்சு, முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் காங்கிரசுக்கு மறைமுகமாக அழுத்தம் கொடுக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tejaswi says we will not face elections without a chief ministerial candidate


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->