ஆப்கான் எல்லை அருகே முகாம்கள் அமைக்கும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்..! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் 'ஆபரேசன் சிந்தூர்' தாக்குதலின் போது லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்க பயங்கரவாதிகளின் முகாம்கள் அளிக்கப்பட்டதை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதேநேரம் 'ஆபரேசன் சிந்தூர்' நடவடிக்கை எதிரொலியால் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத குழுக்களான ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவை பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து தங்களது முகாம்களை வேறு இடத்துக்கு மாற்ற தொடங்கி உள்ளதை இந்திய ராணுவ வட்டாரங்கள் கண்டறிந்துள்ளன.

அதன்படி, ஆப்கானிஸ்தான் எல்லை அருகே உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பயங்கரவாதிகள் தங்களது முகாம்களை  அமைக்கும் நடவடிக்கையை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை இந்தியத் தாக்குதல்களுக்கு ஆளாகக்கூடியதாக பயங்கரவாதிகள் கருதுவதால்,  இந்திய எல்லையில் இருந்து அதிக தூரத்தில் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பயங்கரவாத முகாம்களை அமைக்க முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தியாவின் அதிரடி நடவடிக்கையால் பயங்கரவாதிகள் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஓட்டம் பிடித்து உள்ளதாக பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pakistani terrorists setting up camps near the Afghan border


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->