தூத்துக்குடியில் ஏட்டுடன் கள்ளக்காதல் விவகாரம்: பெண்ணின் கொலைக்கு உதவிய மற்றுமொரு சிறுவன் கைது..!
Another boy arrested in Thoothukudi in connection with the murder of a woman in a fake love affair
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் ராஜேந்திரன். இவருக்கு தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி திரேஸ்நகரைச் சேர்ந்த ராமசுப்பு மனைவி சக்தி மகேஸ்வரியுடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜேந்திரனின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.
சக்தி மகேஸ்வரியின் கணவர் ராமசுப்பு கர்நாடகாவில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளதால் சக்தி மகேஸ்வரி- ராஜேந்திரனின் கள்ளக்காதல் பல ஆண்டுகளாக நீடித்து வந்தது. இந்நிலையில் தனது தந்தையை விட்டு, தாய் பிரிந்ததாலும், ஊரில் ராஜேந்திரன்- சக்தி மகேஸ்வரியின் கள்ளக்காதலால் குடும்பத்தில் அவப் பெயர் ஏற்படுவதால், குறித்த கள்ள காதல் உறவை கைவிடும்படி ஏட்டு ராஜேந்திரனின் 16 வயது மகன், சக்திமகேஸ்வரியை சந்தித்து வலியுறுத்தியுள்ளான். ஆனால் அவர் அதை கண்டுக்கொள்ளாமல் தொடந்து ஏட்டுவுடன் கள்ளக்காதலில் இருந்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த சிறுவன் அவரது நண்பரான மற்றொரு 16 வயது சிறுவனுடன் சேர்ந்து, கடந்த 15-ந்தேதி சக்தி மகேஸ்வரி வீட்டுக்கு சென்று அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் சக்தி மமேஸ்வரி இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இதுகுறித்து தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில், ஏட்டு ராஜேந்திரன் மகன் மற்றும் அவரது நண்பரான மற்றொரு சிறுவனையும் கைது செய்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று ஏட்டு மகனுக்கு மோட்டார் சைக்கிள் கொடுத்து உதவிய அவரது மற்றொரு நண்பரான சிறுவன் ஒருவனும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், அவரது மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
English Summary
Another boy arrested in Thoothukudi in connection with the murder of a woman in a fake love affair