வெளிநாடுகளில் இருந்து வருவோர் நகை கொண்டு வருவதற்கு புதிய விதிகள்..!
New rules for those bringing in jewellery from abroad
வெளிநாடுகளில் இருந்து வருவோர் நகை கொண்டு வர அனுமதிக்கும் விதிகளில் புதிய திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. மதிப்பு அடிப்படையில் அல்லாமல் எடை அடிப்படையில் தங்கத்தை கொண்டு வரும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஆண்களாக இருந்தால் தலா 20 கிராமும், பெண்களாக இருந்தால் தலா 40 கிராம் நகை கொண்டு வர அனுமதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஓராண்டுக்கு மேல் வெளிநாட்டில் தங்கிவிட்டு இந்தியா திரும்புவோர் நகை கொண்டு வந்தால் சுங்க வரி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த காலங்களில் ரூபாய் மதிப்பில் ரூ.1 லட்சத்தில் நகை கொண்டு வரலாம் என விதிகள் இருந்த நிலையில், 40 கிராமுக்கு அதிகமாக தங்கம் கொண்டு வருவோர் 9% வரி செலுத்த வேண்டும் என்ற புதிய விதியும் கொண்டுவரப்பட்டுள்ளது.
English Summary
New rules for those bringing in jewellery from abroad