தரமற்ற முறையில் பூங்காவை கட்டிய திமுக அரசு... சுட்டிக்காட்டிய அதிமுக நிர்வாகி மீது வழக்கா? கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


அதிமுக விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "சென்னை ஆர்.கே. நகரில் உள்ள சாலையோரப் பூங்காவை திமுக அரசு தரமற்ற முறையில் கட்டிய லட்சணத்தை சுட்டிக்காட்டி வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் ராஜேஷ் அவர்கள் சுட்டிக்காட்டிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலானதைக் கண்டு பதறிப்போன விடியா திமுக அரசு, பொய் வழக்குகளைப் பதிந்துள்ளது கண்டனத்திற்குரியது.

வழக்கு பதிந்தால், அந்த பூங்கா தரமானது என்று ஆகிவிடுமா? 

சிறுவர்கள் விளையாட, மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள பயன்படுத்தும் பூங்காவை தரமற்று கட்டுவதால் ஏற்படும் விபத்தால் மக்கள் தானே பாதிக்கப்படுவார்கள்?

இதை ஒரு எதிர்க்கட்சி சுட்டிக்காட்டினால் வழக்கைக் காட்டி மிரட்டுவதா?

உடனடியாக இப்பொய் வழக்குகளைத் திரும்பப் பெற்று, ஆர்.கே. நகர் சாலையோர பூங்காவை மக்களுக்கு பாதுகாப்பானதாக மாற்றி அமைத்திட வேண்டும்" என்று தெரிவித்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK Condemn to DMK MK Stalin


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->