WPL எலிமினேட்டர் போட்டி; குஜராத்தை வீழ்த்திய டெல்லி; 04 முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி..!
Delhi has defeated Gujarat in the WPL Eliminator match and qualified for the final for the fourth time
04-வது மகளிர் பிரீமியர் லீக் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் ஆர்சிபி அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு செல்லவிருக்கும் 02வது அணி எது என்பதற்கான எலிமினேட்டர் போட்டியில் இன்று குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 59 ரன்களுக்குள் 04 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அடுத்து, 05வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜியார்ஜியா மற்றும் பெத் மூனி இருவரும் 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ரன்கள் எண்ணிக்கையை அதிகரித்தனர். இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய பெத் மூனி 62 ரன்கள் அடித்து அணியை 168 ரன்கள் என்ற நல்ல ஸ்கோருக்கு கொண்டு சென்றார்.
169 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க வீரங்கைகளான லிஸல் லீ மற்றும் செப்பாலி வர்மா அதிரடியாக ஆடினார்.

அதில் லிசால் லீ 43 ரன்களிலும், செப்பாலி 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய அணியின் கேப்டன் ஜெனிமா 41 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் லாரா 32 வெற்றி வழி வகுத்தார். அதன்படி, 07 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் 26 பந்துகள் மீதமிருக்க டெல்லி அணி அபார வெற்றிபெற்றுள்ளது.
இதன் மூலம் 04வது முறையாக இறுதிப்போட்டிக்கு டெல்லி அணி தகுதி பெற்றுள்ளது. நாளை மறுநாள் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியை டெல்லி எதிர்கொள்ளும்.
English Summary
Delhi has defeated Gujarat in the WPL Eliminator match and qualified for the final for the fourth time