அஜித் பவார் இறுதிச் சடங்கு கூட்டத்தில் கைவரிசையை காட்டிய திருடர்கள்; ரூ.30 லட்சம் மதிப்புடைய நகை, பொருட்கள் மாயம்; 07 பேர் கைது..!
Seven people have been arrested in connection with the theft of jewelry and valuables worth Rs 30 lakh at Ajit Pawar funeral
மகாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி அன்று நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். அவரின் இறுதிச் சடங்கு கடந்த வியாழக்கிழமை பாராமதியில் உள்ள வித்யா பிரதிஷ்டான் மைதானத்தில் நடைபெற்றது. இந்த இறுதி சட்டங்கில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.
அப்போது அதிக கூட்டத்தை பயன்படுத்திக் கொண்ட திருடர்கள், கூட் டத்தோடு கூட்டமாக சென்று அங்கிருந்தவர்களின் நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருடியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகு, சுமார் 15 பேர் தங்கள் தங்கச் சங்கிலிகள் மற்றும் பொருட்கள் திருடு போனதாகப் போலீசில் புகார் அளித்துள்ளனர். சுமார் சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் திருடப்பட்ட பொருட்கள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
துகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், இன்று (செவ்வாய்க்கிழமை) இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 07 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர். அவர்களின் வாக்குமூலம் அடிப்படையில் திருடப்பட்ட பொருட்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
Seven people have been arrested in connection with the theft of jewelry and valuables worth Rs 30 lakh at Ajit Pawar funeral