நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது; மத்திய அரசு அறிவிப்பு..!
Dadasaheb Phalke Award announced for actor Mohanlal
மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன் லால். இவர் திரைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் வெளியிட்ட உள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தாதாசாகேப் பால்கே விருது தேர்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில், மோகன்லாலுக்கு 2023-ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படவுள்ளது. மோகன்லாலின் குறிப்பிடத்தக்க சினிமா பயணம் வருங்கால தலைமுறையினரை ஊக்குவிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக புகழ்பெற்ற நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கவுரவிக்கப்படுகிறார். இந்த விருது வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி நடைபெறும் 71-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Dadasaheb Phalke Award announced for actor Mohanlal