கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கடும் வீழ்ச்சி: கவலையில் வியாபாரிகள்..!
Vegetable prices drop sharply in Koyambedu market
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் காய்கறிகள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு முழுவதும் இருந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் கொண்டுவரப்படுகிறது.
இந்நிலையில், தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வாங்குவதற்கு வியாபாரிகளும் பொதுமக்களும் குறைந்தளவே வருகை தந்துள்ளனர். இதன்காரணமாக வியாபாரம் இல்லாமல் காய்கறிகள் விலை குறைந்துள்ளது.
அதன்படி, ஒரு கிலோ பெரிய வெங்காயம் 18 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 25க்கும் விற்பனை செய்து வருகின்றனர். தக்காளி கிலோ 20க்கும், உருளைகிழங்கு 17க்கும், கேரட் 30க்கும், பீன்ஸ் 25க்கும், பீட்ரூட் முள்ளங்கி ஆகியவை 15க்கும் விற்பனையாகிறது.
அத்துடன், சவ்சவ், வெண்டைக்காய், புடலங்காய், சுரக்காய் 10க்கும் முட்டைகோஸ் 05க்கும் கத்திரிக்காய் 15க்கும் காராமணி, பாவற்காய் மற்றும் காலிபிளவர் 20க்கும் சேனைக்கிழங்கு 40க்கும், முருங்கைக்காய் 30க்கும், நூக்கல் மற்றும் கொத்தவரங்காய் 25க்கும் கோவைக்காய் 12 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
English Summary
Vegetable prices drop sharply in Koyambedu market