டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த லஷ்கர்-இ-தொய்பா சதித்திட்டம் ; பஞ்சாப், காஷ்மீரில் வெடிகுண்டுகள் மீட்பு; பலத்த பாதுகாப்பில் தலைநகர்..! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானை தளமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு, தலைநகர் டெல்லியில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்ற உளவுத்துறை எச்சரித்துள்ளது.  இதையடுத்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

கடந்த பிப்ரவரி மாதம் 06-ஆம் தேதி, இஸ்லாமாபாத்தில் உள்ள மசூதி ஒன்றில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீரில் இரண்டு IED வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள ராய்யா புறக்காவல் நிலையம் அருகே ஒரு சந்தேகத்திற்கிடமான பையில் IED வெடிகுண்டு கண்டறியப்பட்டது.

உடனடியாக வெடிகுண்டு செயலிழக்கும் படையினர் வரவழைக்கப்பட்டு, குறித்த  IED வெடிகுண்டு பாதுகாப்பாக செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், ஜம்மு காஷ்மீரின் காந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சபபோரா பகுதியில் மற்றொரு IED குண்டு கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது. இதனை ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் இணைந்து செயலிழக்கச் செய்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் வட காஷ்மீரில் கண்டெடுக்கப்படும் மூன்றாவது IED குண்டு இதுவாகும். இதற்கு முன் பாரமுல்லா மற்றும் டாங்மார்க் சாலைகளிலும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக கடந்த நவம்பர் 10 ஆம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர். இந்த  தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பிற்கு தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது தேசிய புலனாய்வு முகமை இந்த வழக்கை விசாரித்து வருகின்றது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lashkar e Taiba plot to carry out terror attack in Delhi Bombs recovered in Punjab and Kashmir


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->