'படித்தது 10 வகுப்பு; பார்த்தது 30 ஆண்டுகளாக மருத்துவம்': போலி டாக்டரை கைது செய்த காவல்துறை..!
Fake doctor arrested after studying 10th standard and practicing medicine for 30 years
பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் 68 வயதான அன்பழகன். இவர் அப்பகுதியில் கிளினிக் வைத்து கடந்த 30 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு மருந்து, மாத்திரைகள் கொடுத்து சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
ஆனால், இவர் போலி டாக்டர் என ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து நேற்று அம்மாபாளையத்திற்கு சென்று அன்பழகன் கிளினிக்கில் அதிரடி சோதனை நடத்தியுள்ளார்.
அப்போது, 30 ஆண்டுகளாக அன்பழகன் பொதுமக்களை ஏமாற்றி, வெறும் 10-ஆம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு, சிகிச்சை அளித்து வந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக பெரம்பலூர் ஊரக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார், போலி டாக்டர் அன்பழகன் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அதன் பின்னர் அன்பழகனை இரவு பெரம்பலூர் நீதிபதி முன் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்வபம் அந்த பகுதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Fake doctor arrested after studying 10th standard and practicing medicine for 30 years