சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு மாபெரும் வெற்றி பெற சீமான் வாழ்த்து!
NTK Seeman Wish Chithirai manadu PMk Vanniyar Sangam
சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு மாபெரும் வெற்றி பெற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "தமிழர் அரசியல் களத்தில் சனநாயகம், சமூக நீதி, சமத்துவம் உள்ளிட்ட முதன்மைக் கொள்கைகளோடு மதுஒழிப்பு, பெண்ணுரிமை, கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்திலும் விளிம்பு நிலை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களது உரிமைகளுக்காகவும், வன்னியர் குடி உள்பட ஒடுக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட அனைத்து சமூகங்களின் மேம்பாட்டுக்காகவும் தொடர்ந்து போராடி வருகிற பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில், காஞ்சிபுரம் மாவட்டம், திருவிடந்தையில் திருவள்ளுவராண்டு 2056 மேழம் (சித்திரை) 28ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (11.05.2025) நடைபெறுகிற, 21ஆவது சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு மாபெரும் வெற்றி பெற நாம் தமிழர் கட்சி சார்பாக நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழர் தாய் நிலத்தில் தமிழ்ப்பகைமை தலைத்தூக்காத வண்ணம் நல்லிணக்கத்தோடு தமிழ்ச் சமூகங்கள் தலை நிமிரவும், தமிழர் இன ஒற்றுமை தழைத்தோங்கவும் அயராது உழைக்கும் சமூகநீதிப்போராளி மருத்துவர் ஐயா ச.ராமதாஸ் அவர்களுக்கும், மருத்துவர் ஐயா அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும் பாட்டாளி உறவுகளுக்கும் எனனுடைய அன்பு வணக்கமும்! வாழ்த்துகளும்!
சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு சிறக்கட்டும்!
மக்கள் நலக் கோரிக்கைகள் வெல்லட்டும்! என சீமான் தெரிவித்துள்ளார்.
English Summary
NTK Seeman Wish Chithirai manadu PMk Vanniyar Sangam